பாகுபலியில் நடித்தபோது நெருக்கம் நடிகை அனுஷ்கா–பிரபாஸ் காதல்? பட உலகில் பரபரப்பு


பட உலகில் பரபரப்பு
 
நடிகை அனுஷ்கா– தெலுங்கு நடிகர் பிரபாஸ் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. இவர் 2002–ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘அருந்ததி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தி வரும் பாகுபலி–2 படத்திலும் பிரபாஸ் ஜோடியாக நடித்து உள்ளார். தொடர்ந்து பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திருமண ஏற்பாடு

அனுஷ்காவுக்கு வயதாகி விட்டதால், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், பாகுபலி படம் வெளியானதும் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. சில நடிகர்களுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்களும் வந்தன. தெலுங்கு பட உலகில் அறிமுகப்படுத்தி தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த நாகார்ஜுனாவை அவர் விரும்புவதாக கூறப்பட்டது. ஆர்யாவுடனும் சேர்த்து பேசப்பட்டார். அவர்களை காதலிக்கவில்லை என்று பின்னர் மறுப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தெலுங்கு பட உலகில் புதிதாக தகவல் பரவி உள்ளது. பிரபாசுக்கு 37 வயது ஆகிறது. அவருக்கும் வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கம்

பாகுபலியில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலை பிரபாஸ் குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும், அவர்கள் வேறு பெண்ணை பார்ப்பதாகவும் தகவல் பரவுகிறது.

காதல் கிசுகிசுக்களுக்கு அனுஷ்கா–பிரபாஸ் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் வரவில்லை. தற்போது பிரபாஸ் வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url