தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்பட்ட நடிகை வித்யா

 பாலிவுட் நடிகையும், தேசிய விருது பெற்றவருமான வித்யா பாலன், தமிழில் அஜித் குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்துள்ள தனியார் பேட்டியில், ‘ஆரம்பகாலத்தில் நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தேன். சென்னையில் 2 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், திடீரென்று என்னை நீக்கிவிட்டு, வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளரை நேரில் சந்திக்க, எனது பெற்றோருடன் அவரது ஆபீசுக்கு சென்றேன். அப்போது அவர் சில ஸ்டில்களைக் காட்டி, ‘எந்த ஆங்கிளில் இவர் ஹீரோயின் மாதிரி தெரிகிறார்?’ என்று கேட்டார்.

மேலும் அவர், ‘உங்கள் மகளுக்கு நடிக்க தெரியவில்லை. அவரால் சரியாக டான்ஸ் ஆட முடியவில்லை’ என்றார். பிறகு நான் எதுவும் பேசவில்லை. அவர் என்னை அவமானப்படுத்திய பின்பு, 6 மாதங்களுக்கு கண்ணாடியில் என் முகத்தை பார்க்கவில்லை. நான் அசிங்கமாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன். யாரையாவது நிராகரிப்பதாக இருந்தால், அன்பான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். வார்த்தைகளால் ஒருவரை காயப்படுத்தவும், சந்தோஷப்படுத்தவும் முடியும். அவர் சொன்னதை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்’ என்றார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url