என்ன செய்கிறார் தெரியுமா? ''திரிஷ்யம்'' எஸ்தர் அனில்

 தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ என்ற படத்தில் நடித்த மலையாள நடிகை எஸ்தர் அனில், தமிழில் ரிலீசாகாத ‘குறளி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் ‘வி 3’, ‘மின்மினி’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தெலுங்கில் ‘ஜோஹார்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

மும்பை தனியார் கல்லூரியில் பொருளாதாரத்தில் ஏற்கனவே பட்டம் பெற்ற எஸ்தர் அனில்,  லண்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுநிலை வகுப்பில் சேர்ந்திருக்கிறார். ஒரு வருட படிப்பான இதில் கடந்த செப்டம்பர் மாதம் எஸ்தர் அனில் சேர்ந்துள்ளதாக சொன்ன எஸ்தர் அனிலின் தந்தை, ‘இதில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது எஸ்தர் அனிலின் மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அவரது கனவு இன்று நனவாகியுள்ளது’ என்று தெரிவித்தார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url