மீண்டும் பில்லா போன்ற ஸ்டைலிஷ் அஜித்... பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தகவல்..

 ''விடா முயற்சி'' மற்றும் '’குட் பேட் அக்லி’' ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். அதுகுறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ''விடா முயற்சி''. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இதுகுறித்து கூறியபோது, “இந்த படத்தின் தாமதத்திற்கு லொகேஷனே காரணம்; தட்பவெப்ப நிலை காரணமாக பல நாட்கள் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பக்கா கமர்ஷியல் திரைப்படம் ஆக ’குட் பேட் அக்லி’ இருக்கும் எனவும், அஜித் நடித்த பில்லாவுக்கு பிறகு அவரை வேற ஒரு ஸ்டைலில் நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் அவர் கூறினார். இவரின் பேட்டியில் இருந்து ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url