புலம்பும் ''தளபதி 69'' நடிகை பூஜா ஹெக்டே...

 தமிழில் ஜீவாவுடன் ‘முகமூடி’, விஜய்யுடன் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்தவர், பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அவர், அங்கு நிறைய தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் ஏற்கனவே சில தவறுகள் செய்துவிட்டேன். அந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில் உஷாராக இருக்கிறேன். எனது கடந்த கால படங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, அவற்றில் என்னென்ன தவறு செய்தேன் என்று தெரிந்துகொண்டேன்.

தற்போது கதைகளை தேர்வு செய்வதில் எனது அணுகுமுறையை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளேன். இனிமேல் கதைகள் தேர்வு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க முக்கியத்துவம் தருவேன். அடுத்த ஆண்டு எனக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என்றார். தற்போது மகேஷ் பாபு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்திலும், சூர்யா ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url