எல்லாத்துக்கும் பொறுப்பேற்கும் துல்கர் சல்மான்....

 ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால் அது முற்றிலும் தன்னுடைய பொறுப்பு தான் என நடிகர் துல்கர் சல்மான் நேர்காணலில் கூறியுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் விருப்ப நாயகனாக இருப்பவர் துல்கர் சல்மான். வித்தியாசமான கதைகளின் மூலம் சினிமா பிரியர்களுக்கான ஹீரோவாக இருந்த இவர், சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக முற்றிலும் மாறிவிட்டார்.

இந்நிலையில், துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ''லக்கி பாஸ்கர்'' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

பல மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு முன்னதாக அறிவித்துள்ளது. இந்த சமயத்தில், லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் பங்கேற்று பேசினார். அப்போது, ஒரு படத்தின் தோல்வி என்பது முற்றிலும் என்னுடைய பொறுப்பு தான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url