மிரட்டலுக்கு நடுவில், சொன்னதை செய்த சல்மான்கான்... இதல்லவா வாக்குறுதி....

 ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கான், அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கம் அகைன்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் முதலில் சுல்புல் பாண்டே கதாபாத்திரத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் சல்மான்கான். ‘டபாங்’ படத்தில் சல்மான்கான் நடித்த சுல்புல் பாண்டே கதாபாத்திரம் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சல்மான்கானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், நண்பர் பாபா சித்திக் கொலை உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களால் ‘சிங்கம் அகைன்’ படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. மேலும், படமும் தணிக்கை செய்யப்பட்டது.

இதனால், சல்மான் கான் நடிப்பது கைவிடப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பில், ‘சிங்கம் அகைன்’ படப்பிடிப்பு நேற்று (அக். 22) மும்பையில் நடைபெற்றது. இதில் சல்மான்கான் கலந்துக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். இந்தக் காட்சியின் பணிகளை உடனடியாக முடித்து, படத்தில் இணைக்க பணிபுரிந்து வருகிறார் ரோஹித் ஷெட்டி.

இந்தக் காட்சி ‘சிங்கம் அகைன்’ படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெறும் எனத் தெரிகிறது. அடுத்த பாகத்தில் இதர கதாபாத்திரங்களுடன் சல்மான் கானின் சுல்புல் பாண்டே கதாபாத்திரமும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url