ரிலீசுக்கு முன்பே வசூலை குவிக்கும் கங்குவா..

 நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமான உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். வரலாற்று கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிவா.

தெலுங்கு ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப் போல் தமிழ் சினிமாவிற்கு இந்த கங்குவா அமையும் என படக்குழுவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வசூல் சாதனையையும் கங்குவா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் USA ப்ரீ சேல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை USA ரூ. 8.5 லட்சம் வரை கங்குவா படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் USA-வில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்கின்றனர். 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url