Type Here to Get Search Results !

அதிரடியான விலை மற்றும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா அறிமுகம்!!!!!



சாம்சங் தனது முதன்மை மாடல்களான கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா இரண்டும் 4 ஜி மற்றும் 5 ஜி இணைப்பு விருப்பங்களுடன் வருகின்றன.

5ஜி ஆதரவுடன் வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் அடிப்படை 128 ஜிபி வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.75,400 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அடிப்படை 128 ஜிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.97,500 க்கு அறிமுகமாகி உள்ளது.



கேலக்ஸி நோட் 20 5ஜி மாடல் ஆனது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, அதன் 4ஜி பதிப்பில் வெறும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மட்டுமே உள்ளது.

மறுகையில் உள்ள கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி, 256 ஜிபி, மற்றும் 512 ஜிபி சேமிப்பு விருப்பங்களுடன் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 4ஜி விருப்பமானது 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது.

கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் ப்ரான்ஸ், மிஸ்டிக் கிரே மற்றும் மிஸ்டிக் கிரீன் கலர் விருப்பங்களில் வருகிறது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் ப்ரான்ஸ் வண்ணங்களில் வருகிறது. இந்த இரண்டு புதிய மாடல்களும் ஆகஸ்ட் 21 முதல் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் & அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அளவிலான எஃப்.எச்.டி + சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் வீகிதம், 393 பிபிஐ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதம் போன்றவைகளை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைக்கு ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 990 கொண்டும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர் கொண்டும் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு (யுஎஃப்எஸ் 3.1) கொண்டுள்ளது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஆதரவு இல்லை.


கேமராத்துறையை பொறுத்தவரை, எல்இடி ஃப்ளாஷ், எஃப் / 1.8 லென்ஸ், பி.டி.ஏ.எஃப், ஓ.ஐ.எஸ் கொண்ட 12 எம்பி ரியர் கேமரா + எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட 64 எம்.பி டெலிஃபோட்டோ லென்ஸ் (பி.டி.ஏ.எஃப், 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 30 எக்ஸ் வரை ஸ்பேஸ் ஜூம்) + 12 எம்.பி (எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 120 ° அல்ட்ரா வைட் சென்சார்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன் பக்கத்தில் எஃப் / 2.2 லென்ஸ் மற்றும் இடூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸுடன் 10 எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4300mAh பேட்டரி உள்ளது அது 25W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் (WPC மற்றும் PMA) சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் போன்ற திறன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ரீடரும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (ஐபி 68) சான்றளிக்கப்பட்டிருக்கிறது, மேலும் ஏ.கே.ஜி-உகந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

தவிர சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax (2.4 / 5 ஜிகாஹெர்ட்ஸ்), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் வித் க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி (ஜெனரல் 3.2), என்.எஃப்.சி ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 161.6 x 75.2 x 8.3 மிமீ உள்ளது. கேலக்ஸி நோட் 20 உடன் வரும் எஸ்-பென் ஸ்டைலஸ் 26 மில்லி விநாடிகள் என்க்ரியா லேடன்சியை வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.9 இன்ச் குவாட் எச்டி + டைனமிக் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை, 3088 × 1440 பிக்சல்கள் பிக்சல் தீர்மானம், 19.3: 9 விகிதம், எச்டிஆர் 10+ ஆதரவு, 496 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் புரெஃப்ரெஷ் ரேட் வீகிதம், 1500 நைட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்றவைகளுடன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைக்கு ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 990 உடனும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. இது 25 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ் (யுஎஃப்எஸ் 3.1) உடன் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் மைக்ரோ எஸ்.டி உடன் 1TB வரை விரிவாக்கக்கூடிய நினைவகத்தைக் கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவில் எல்இடி ஃப்ளாஷ், எஃப் / 1.8 லென்ஸ் பிடிஏஎஃப், ஓஐஎஸ், லேசர் ஏஎஃப் சென்சார் கொண்ட 108 எம்பி கேமரா + எஃப் / 3.0 லென்ஸ் கொண்ட 12 எம்.பி பெரிஸ்கோப் லென்ஸ், பி.டி.ஏ.எஃப், ஓ.ஐ.எஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 50 எக்ஸ் வரை சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் + எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 12 எம்.பி 120 ° அல்ட்ரா வைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது எஃப் / 2.2 லென்ஸ், 1.22 மைக்ரான் பிக்சல்கள் மற்றும் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸுடன் 10 எம்.பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் (WPC மற்றும் பிஎம்ஏ) சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது Android 10 அடிப்படையிலான OneUI உடன் இயங்குகிறது.

இணைப்பு அம்சங்களை பொறுத்தவரை, இது 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, வைஃபை 802.11ax (2.4 / 5GHz), ப்ளூடூத் 5, க்ளோனாஸ் உடன் GPS, USB டைப்-சி (Gen 3.2), NFC போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 164.8 x 77.2 x 8.1 மிமீ மற்றும் 208 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (ஐபி 68) சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் ஏ.கே.ஜி-உகந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவுடன் வரும் எஸ்-பென் ஸ்டைலஸ் 9 மில்லி விநாடிகள் என்கிற லேடன்சியை வழங்குகிறது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவை ஒரு மினி டெஸ்க்டாப்பாக மாற்ற அனுமதிக்கும் வயர்லெஸ் டெக்ஸ் ஆதரவும் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad