Type Here to Get Search Results !

வெறும் rs.5500 க்கு சாம்சங் ஸ்மார்ட் போன் ஆ !!! சாம்சங் கேலக்ஸி A01 கோர் ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் !!!!!



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ01 கோர் எனும் புதிய நுழைவு நிலை ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம், அறியப்படாத 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது சாதாரண 16 ஜிபி மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோர் ஆனது டிஸ்ப்ளேவின் அனைத்து பக்கங்களிலும் பாரம்பரிய பெசல்களையும், எச்டி+ ரெசல்யூஷனுடன் 5.3 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. உடன் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஆனது இந்தோனேசியாவில் இந்திய மதிப்பின்படின் தோராயமாக ரூ.5,500 க்கு அறிமுகமாகி உள்ளது. இது 16 ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு விருப்பங்களில் வழங்கப்படுகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இது ஜூலை 23 வரை தோராயமாக ரூ.5,000 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோர் ஆனது நீலம், கருப்பு மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A01 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:



டூயல் சிம் ஆதரவு கொண்ட (நானோ) சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோர் ஸ்மார்ட்போன் ஆணையு ஆண்ட்ராய்டு கோ பதிப்பை இயக்குகிறது. இது 5.3-இன்ச் எச்டி + (720x1480 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் இது 1.5GHz வேகத்தின்கீழ் அறியப்படாத குவாட் கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 1 ஜிபி ரேம், 32 ஜிபி வரை சேமிப்பு, மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு (512 ஜிபி வரை) வழியாக சேமிப்பக விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோரில் 8 மெகாபிக்சல் சிங்கிள் பின்புற கேமரா உள்ளது, இது எஃப் / 2.2 லென்ஸ், ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு மற்றும் 4 எக்ஸ் வரை டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோர் ஆனது 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை எஃப் / 2.4 லென்ஸ் உடன் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 01 கோர் ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது இது 17 மணிநேர 4 ஜி பேச்சு நேரம், 14 மணிநேர எல்டிஇ அல்லது வைஃபை இணைய பயன்பாடு, 11 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 70 மணிநேர வீடியோ வரை வழங்கும்.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் பல உள்ளன. போர்டில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, ஆக்சலரோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 141.7x67.5x8.6 மிமீ மற்றும் 150 கிராம் எடையும் கொண்டுள்ளது.

          

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad