Type Here to Get Search Results !

குழந்தைகளுக்கு கோதுமை நிலக்கடலை பவுடர் மற்றும் porridge

பயன்கள் :

1) உடல் வளர்ச்சிக்கு நல்லது 
2) மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. 
3) வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைய உள்ளன.
8 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த பொடியை குடுக்கலாம். 

WHEAT POWDER க்கு: 

கோதுமை ரவா - 1 கப் 
பச்சை பயறு - 1/2கப் 
வேர்க்கடலை - 1/4கப்

Porridge  செய்வதற்கு :

கோதுமை மாவு  - 3 tblspn 
தண்ணீர்  - 1 கப்
உப்பு தேவையான அளவு 
நெய் தேவையான அளவு 

செய்முறை :

வெறும் வாணலியில் கோதுமை ரவையை  போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 

ஒரு தட்டில் மாற்றி வைக்கவும். 

பின் அதே வாணலியில் பச்சை பயிரை  எடுத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

அதை ஒரு தட்டில் ஆற வைத்து பவுடர் பன்ணவும்.
 
இப்போது ஒரு கடாயில் வேர்க்கடலையை எடுத்து, பொன்னிறமாக வறுக்கவும்.

வேர்க்கடலையை ஒரு மிக்ஸியில்  எடுத்து கர கரப்பாக  அரைத்து எடுத்து கொள்ளவும். 

கோதுமை ரவையுடன் இதை mix செய்யவும்.

பிரிட்ஜ் இல்  காற்று புகாத டப்பாவில் நன்கு மூடி வைக்கவும். 

Porridge  தயாரிக்க  ஒரு பாத்திரத்தில் பவுடர்  மற்றும் தண்ணீரை சேர்த்து  கெட்டியாகும் வரை வேக வைக்கவும். 
உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பரிமாறவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad