வனிதா விஜயகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்!!!!!!


பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்து கொண்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. ஏற்கெனவே திருமணம் செய்து விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்வது சட்டவிரோதம் என்று பலரும் கருத்து சொன்னார்கள்.

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தரன், யுடியூப் சூர்யாதேவி ஆகியோர் வனிதாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இவர்கள் மீது வனிதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு யூ-டியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும், என் கணவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான், அந்த சேனலை தொடர்புகொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே அவர் தவறாக பேசினார். பின்னர் அந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.


அதைத் தொடர்ந்து நானும், எனது கணவரும் எங்களது வக்கீல் மூலமாக உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீசு அனுப்பியுள்ளோம். வடபழனி மகளிர் போலீஸ் நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் அந்த நோட்டீசின் நகல் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அதில் கூறியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url