Type Here to Get Search Results !

முடி கருப்பாவும் இல்லாம நரையாவும் இல்லாம சாம்பல் நிறத்தில் இருக்கா, இதுதான் ஏற்ற பராமரிப்பு!

பொதுவாக கூந்தலில் பிரச்சனை என்பதை தாண்டி, கூந்தலின் நிறமும் கூட பிரச்சனைக்குள்ளாக்கும். சிலருக்கு முடி நரைக்கு பிரச்சனை இருக்கும். சிலருக்கு முடி செம்பட்டை போன்று இருக்கும். இன்னும் சிலருக்கு முடி சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் செய்ய வேண்டிய பராமரிப்பு வேறு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பெரும்பாலும் கூந்தல் அழகை பராமரிக்க அதிகம் மெனக்கெடுகிறோம். ஆனால் அருகில் இருக்கும் எளிமையான பொருளின் அற்புதமான குணங்களை அறியாமல் போகிறோம். அப்படி நம் கண் எதிரே இருக்கும் பொருள்களில் ஒன்று கற்றாழை. இதை உரிய முறையில் தேவையான பொருளோடு சேர்த்து எடுத்துகொண்டால் முடியின் சாம்பல் நிறம் மறைந்து முடியின் நிறம் கருமையாக இருக்கும். இதை எப்படி எடுத்துகொள்ளலாம் என்று தெரிந்துகொள்வோம்.

கற்றாழை

கற்றாழை உடலுக்கும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. இவை அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் செய்யும் நன்மைகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கற்றாழையின் ஜெல் போன்று அதன் வழவழப்பான திரவம் கூந்தலுக்கு பட்டுபோன்ற மென்மையைத் தருகிறது.

கூந்தல் வறட்சியடைந்திருந்தால் அதை நீக்கி பொலிவை தருகிறது. இவை தலை சருமத்தின் பிஹெச் அளவை சரிசெய்ய உதவுகிறது. கூந்தலுக்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதால் கூந்தல் வளர்ச்சி குறையில்லாமல் இருக்கிறது.

கற்றாழையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கூந்தலில் இருக்கும் நச்சுகளை விரட்டி அடிக்க உதவுகிறது. இதிலிருக்கும் தாதுக்கள், வைட்டமின்கள், லிப்பிடுகள், அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டி முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. அதனால் தான் பெரும்பாலான அழகு பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையில் கிடைக்கும் ஹேர் டை இது. மருதாணி அழகு தருவதற்காக பயன்படுத்தினாலும் இதை பயன்படுத்துவதன் மூலம் உடலினுள்ளும் பல நல்ல மாற்றங்களை தருகிறது. மருதாணியின் அழகே அவை தரும் சிவந்த நிறம் தான். கூந்தலில் நரை விழுந்தாலும் அதை அழகாய் சிவப்பாக வைக்க பக்கவிளைவில்லாத மருதாணி தான் பெரிதும் உதவும்.

மருதாணி


மருதாணி இலைகளை நிழலில் உலர்த்தி நாமே பொடித்து வைத்துகொள்ளலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம். இவை முடிக்கு நிறம் தருவதோடு தலையின் உஷ்ணத்தை குறைத்து கூந்தலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. அதனால் மருதாணியை பயன்படுத்துவதில் தயக்கம் வேண்டாம்.

தயிர் மற்றும் பேக்கிங் சோடா


பேக்கிங் சோடா சருமத்தை சுத்தம் செய்வது போன்று கூந்தலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. கூந்தலில் நரை படிவதற்கு முன்பு முதலில் தோன்றுவது செம்பட்டை நிற மாற்றம் தான். கூந்தலில் அழுக்கும், தூசியும் அதிகமாக படியும் போது இந்த பிரச்சனை அதிகரிக்க கூடும். அதனால் கூந்தல் பிரச்சனை குறிப்பாக கலர் மாற்றத்துக்கான பராமரிப்பு செய்யும் போது கண்டிப்பாக பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். இவை கூந்தல் சுத்திகரிப்பை சிறப்பாக செய்வதால் இதையும் சேர்க்கலாம்.

பெரும்பாலும் இவை சருமத்துக்கு சேதாரம் உண்டாக்குவதில்லை என்றாலும் ஆரம்பத்தில் இவை உங்களுக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதையும் பரிசோதித்த பிறகு பயன்படுத்த வேண்டும். ஆனால் தயிர் அப்படி அல்ல, அவை பக்கவிளைவில்லாமல் அழுக்கை நீக்கும் இயற்கை ப்ளீச். சருமத்துக்கு எப்படியோ கூந்தலுக்கும் அப்படியே பலன் தரும்.

எப்படி பயன்படுத்தலாம்

மருதாணி பொடியை காட்டிலும் மருதாணி இலைகளையும் பயன்படுத்தலாம். இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஊறவைத்து சம அளவு கற்றாழை ஜெல்லை கலக்கவும். கூடுதலாக அவை பேஸ்ட் பதத்துக்கு குழையும் வரை கெட்டித் தயிர் கொண்டு கலக்கவும். பேக்கிங் சோடா அதிகம் வேண்டாம். ஒரு டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா பயன்படுத்தினால் போதும்.

இதை கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் கூந்தல் நுனிவரை தடவ வேண்டும். பிறகு தலைமுடியில் நன்றாக படர்ந்ததும் தலைக்கு ஹேர் பேக் போட்டு 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும். உங்கள் கூந்தலின் நிறம் மிக மோசமான பாதிப்பை அடைந்தால் நீங்கள் வாரம் இருமுறை கூட இதை செய்யலாம். இப்படி செய்து வந்தால் கூந்தலின் சாம்பல் நிறம் மறைந்து முடியின் கருமை அதிகரிக்கும்.

குறிப்பு

இந்த கூந்தல் பேக் பயன்படுத்தினால் அவை உடலுக்கு குளுமை தரக்கூடும். அதனால் சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு கோடையாக இருந்தாலும் நீங்கள் இதை குறைந்த நேரம் பயன்படுத்த விரும்பினாலும் அதில் துளசி சாறு, வேப்பிலை சாறு போன்றவற்றை பயன்படுத்தலாம். எனினும் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad