Type Here to Get Search Results !

உங்கள் குழந்தைகளின் தலையில் பேன் ஈறு போன்ற தொல்லைகள் இருக்கிறதா ??? உங்களுக்கான சில தீர்வுகள் இதோ !!!!



வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்கள் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்தபாடிருக்காது.

குழந்தைகளுக்குப் பள்ளி ஆண்டு விடுமுறைவிட்டாலே, பேன் சீப்பும் கையுமாகக் குழந்தைகளின் தலையில் இருக்கும் பேன், மற்றும் ஈறுகளை ஒழிப்பதே அம்மாக்களுக்கு 'தலை'யாய கடமையாகிவிடும்.

தற்போதைய சூழலில், குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளின் தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதற்கான வழிமுறைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

"தலையை சுத்தமாக வைத்துக்கொண்டாலே இந்தப் பேன், ஈறு பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். அதனால், குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணய் வைத்துக் குளிப்பாட்டவும்.

தவிர, கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம். கெட்டியான தேங்காய்ப்பால் தயாரித்து, ஒரு கிண்ணத்தில் ஊற்றி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

தேங்காய்:



தேங்காய்ப்பாலில் உள்ள தண்ணீர், கிண்ணத்தின் அடியில் தங்கிவிடும். மேலே க்ரீம் போன்று மிதக்கும். இதை எடுத்துக் குழந்தையின் கேசம் முழுவதும் தடவி பேக்காகப் போடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ போடாமல் வெறும் தண்ணீரில் தலைக்குக் குளிக்கவைக்கவும்.

குழந்தைகளின் தலை மற்றும் கூந்தலைத் தவறாமல் பராமரித்து வந்தாலே பேன், ஈறு போன்ற பிரச்னைகள் வராது" எனும் ரேச்சல், பேன் மற்றும் ஈறு பிரச்னையைப் போக்கும் வழிமுறைகளை விவரிக்கிறார்.

1. வேப்பிலை ஹேர் பேக்:



ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தேய்த்து (தலையில் எண்ணெயில்லாமல் இருப்பது நல்லது), 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

அரை லிட்டர் வெந்நீரில் 2 அல்லது 3 கிராம் படிகாரத்தூள் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். குழந்தைக்கு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கவைத்ததும், மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை தலையில் ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிவிடவும்.

வேப்பிலை மற்றும் படிகாரம் இரண்டுமே ஆன்டி வைரல் தன்மை கொண்டவை. தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதுடன் மறுபடி வரவிடாமல் காக்கும்.

2. வெற்றிலை பேக்:



பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதைத் தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும். 2 முதல் 3 கிராம் படிகாரத்தூளை வெந்நீரில் கரைத்து ஆறவிடவும்.

சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குழந்தைக்குத் தலையை அலசவும். மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை குழந்தையின் தலையில் ஊற்றி, 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிவிடவும்.

3. கடுகு எண்ணெய்:



தேவையான அளவு கடுகு எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சீயக்காய்த்தூள் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கவைக்கவும். பேன் தொல்லை நீங்கும்.

4. நல்லெண்ணெய்:



மிதமாக சூடாக்கிய நல்லெண்ணெயைக் குழந்தையின் தலையில் நன்றாகத் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு, பேன் சீப்பால் நன்கு வாரினால், பேன்கள் அனைத்தும் வந்துவிடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad