கருவாட்டு குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி? !!

கருவாடு -25 துண்டுகள் (நான் நெத்திலி கருவாடு பயன்படுத்தினேன்) 

தேங்காய் எண்ணெய் - 2 tblspn 

கடுகு - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை - 1கொத்து 

பூண்டு - 10 உரித்தது  

வெங்காயம் - 1 பெரியது   

பச்சை மிளகாய் - 1 கீறியது 

தக்காளி - 1 பெரியதாக  நறுக்கியது 

கத்திரிக்காய் - 1 

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 

கொத்தமல்லி  - 1 டேபிள்ஸ்பூன்  

மஞ்சள் தூள்  - 1 தேக்கரண்டி 

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 

சீரகத்  தூள் - 1 தேக்கரண்டி 

உப்பு தேவையான அளவு 

புளிக் கரைசல் - 4 tblspn 

அடர்த்தியான தேங்காய் பால் - 1/2 கப் 

தேவைக்கேற்ப தண்ணீர்

செய்முறை :

கருவாடை நன்கு சுத்தம் செய்யவும்.

பின் அதில் சூடான நீரை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 
பின் வடிகட்டவும். 

தேங்காய் எண்ணெயை ஒரு மண் சட்டியில்  சூடாக்கவும். 

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். அவை மசியும் வரை வதக்கவும். 

தக்காளி சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை மென்மையாக மாறும் வரை வதக்கவும். 

அனைத்து மசாலா பொடிகள் மற்றும் கத்திரிக்காய்  சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும். 

இப்போது புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். 

கருவாடை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். 

தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். 

உப்பு சரி பார்த்து பின் கறிவேப்பிலை சேர்க்கவும். 

இதை சாதத்துடன்  பரிமாறவும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url