Type Here to Get Search Results !

கர்ப்பிணிகளை அதிகமாக பாதிக்கக் கூடிய குடலிறக்கத்தின் விளைவுகள் மற்றும் ஆபத்துக்கள் !!!!!



குடலிறக்கம் என்பது பொதுவாக உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு வரக்கூடிய நோய்.ஆனால் தற்சமயங்களில் கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது.இது எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் அதற்கான சிகிச்சைப் பற்றியும் பார்க்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவு ஆபத்தை விளைவிக்கும் நோய் குடலிறக்கம். அதனைப் பற்றி இப்பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்

கர்ப்பக் காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்ததின் காரணமாக குடலிறக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வோம்.
கர்ப்பிணிப் பெண்கள்:

கர்ப்பிணி பெண்கள் கூட குடலிறக்கத்தால் பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடலிறக்கம் என்பது உட்புற உறுப்பின் ஒரு பகுதி தசையின் திறப்பு வழியாக வெளியேறும்போது ஏற்படும் ஒரு நிலை என்று கூறலாம். எளிதாக கூறினால், குடலிறக்கம் என்பது உங்கள் உறுப்புகளையும் திசுக்களையும் பிடிக்கும் அடிவயிற்றின் சுவரில் ஒரு சிறிய துளையை ஏற்படும் என்பதே ஆகும்.

வயிறு மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் பொதுவாக குடலிறக்கங்கள் காணப்படுகின்றன. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் குடலிறக்கத்தால் பாதிக்கப்படலாம் - ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நிலை ஆபத்தான மற்றும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

​கர்ப்பிணி பெண்கள் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்?

உங்களுக்கு குடலிறக்கம் இருந்தால், உங்கள் தொப்பை மற்றும் இடுப்பைச் சுற்றி ஒரு சிறிய கட்டி வளரும். நீங்கள் இரும்பும் போது அல்லது தும்மும்போது கஷ்டங்களை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் குடலிறக்கம் தாய்க்கு நிறைய அசௌரியங்களை ஏற்படுத்தும், ஆனால் இது கருவில் இருக்கும் குழந்தைக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

ஆபத்துகள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் குடலிறக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பின்வருமாறு

அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குடலிறக்கம் வர வாய்ப்பில்லை, ஆனால் ஒரு சில ஆபத்து காரணிகள் உங்கள் சிக்கல்களை அதிகரிக்கச் செய்யும்,அவைகளைப் பற்றி பார்க்கலாம்

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை ஜூம்பா பயிற்சி செய்து பராமரிக்க வேண்டும்.

பலமுறை கர்ப்பம் தரித்தல், வயிற்றில் அறுவை சிகிச்சை, அடிவயிற்றில் இருக்கும் அதிக அளவு நீர்ச்சத்து, நாள் கழித்து தாமதமாக கர்ப்பம் ஆகுதல், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் போன்ற காரணத்தினால் உடல் பருமன் ஏற்படுகிறது.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:

அறிகுறிகள் பொருத்தவரை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒரு இமேஜிங் சோதனை அல்லது உடல் பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே நீங்கள் குடலிறக்கத்தால் பாதிக்கப்படுகிறீர்களா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

வழக்கமாக, ஒரு வீக்கம் அல்லது ஒரு கட்டை போன்ற உணர்வு ஒரு பொதுவான அறிகுறியாகும். குமட்டல், வாந்தி, காலப்போக்கில் மோசமடையக் கூடிய கூர்மையான வலி, மலத்தை கடக்க இயலாமை, சிரிக்கும்போது அல்லது இருமும்போது வலி, மற்றும் குடலிறக்க வீக்கம் சிவப்பு நிறமாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் குடலிறக்க சிகிச்சை:

உங்கள் மருத்துவர் உங்களுக்கு அணிய ஒரு வயிற்று ஆதரவு பெல்ட்டைக் கொடுக்கலாம், மேலும் சில நாட்கள் காத்திருக்கும்படி கூறுவார்கள். உங்கள் வயிற்று தசைகள் குணமடைய உடல் பயிற்சிகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார்கள் (கர்ப்ப காலத்தில் ஏற்படும் திரிபு காரணமாக). குடலிறக்கம் இன்னும் மேம்படவில்லை என்றால், ஒரு அறுவை சிகிச்சை மூலமாகவே இதனை குணப்படுத்த முடியும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad