திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி


தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ 
சீரக  சம்பா அரிசி - 3 கப் 
எண்ணெய் - 2 tblspn 
நெய் - 2 tblspn 
வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 3 கீறியது 
தக்காளி - 2  நறுக்கியது 
இஞ்சி பூண்டு விழுது - 2 tblspn 
மஞ்சள் தூள்  - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 tblspn 
கொத்தமல்லி தூள்  - 2 tblspn
உப்பு தேவையான அளவு  
கொத்தமல்லி இலை - 1/4 கப் நறுக்கியது புதினா இலை - 1/4 கப் நறுக்கியது 
தண்ணீர்  - 4.5 கப் 

பிரியாணி மசாலா பொடிக்கு:

பட்டை  - 4  
பெருஞ்சீரகம் - 1.5 tblspn
ஜாவித்ரி - 5 
கல்பாசி - 5 துண்டு 
சீரகம் - 2 தேக்கரண்டி 
கிராம்பு - 5 
ஏலக்காய் - 5 
நட்சத்திர சோம்பு - 1 

செய்முறை: 

சீரக சம்பா அரிசியை தண்ணீரில் நன்கு கழுவவும்.

அரைக்க வேண்டிய மசாலாப் பொருட்களை மிக்ஸியில் எடுத்து அதை பவுடர் பண்ணவும். 

பின்னர்  பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்க்கவும். 30 வினாடிக்கு நன்றாக வதக்கவும். 

மிக்ஸியில் அரைத்த பவுடரை சேர்க்கவும். நன்றாக கலந்ததும் மட்டன்  சேர்த்து நன்கு கலக்கவும். 

1 கப் தண்ணீர்  சேர்த்து, மூடி, குக்கரில்  7 முதல் 8 விசில் வரை விடவும். 

15 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து பின்னர் இறக்கவும்.

பின்னர் அரிசி சேர்த்து நன்கு கலக்கவும். 4.5 கப் தண்ணீரில் சேர்த்து, அதை கொதிக்கவைத்து, வேகவைத்து, 1 விசில் விடவும்.

பின்னர் 5 நிமிடங்களுக்கு சிம்மில்  வைக்கவும். 

அடுப்பை அணைத்து  இறக்க சுவையான தலப்பாக்கட்டி பிரியாணி ரெடி.. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url