‘மாஸ்டர்’ தியேட்டர் ரிலீஸ் தான்!! மேலும் உறுதிசெய்த சேவியர் பிரிட்டோ.!


விஜய்யின் வரவிருக்கும் ‘மாஸ்டர்' படத் தயாரிப்பாளர்கள் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும், OTT வெளியீட்டிற்கான திட்டங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அறிவித்துள்ளனர். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தற்போது இதை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது 2021 பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் மாளவிகா மோஹனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தல் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா சுப்பிரமணியன் மற்றும் கௌரி கிஷன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளனர்.
இதற்கிடையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் திரைக்கு அறிமுகப்படுத்த தயாராக உள்ளார் என்ற வதந்திகளையும் சேவியர் பிரிட்டோ மறுத்துள்ளார். ஜேசன் திரைப்படங்களுக்குள் நுழைவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், அவர் தற்போது கனடாவில் படிப்பதில் பிஸியாக இருப்பதாகவும் அவர் கூறினார். எதிர்காலம் தொடர்பான முடிவுகள் அவரது படிப்பு முடிந்த பின்னரே எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url