Type Here to Get Search Results !

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A71 போனின் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம்!



சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போனின் புதிய ஹேஸ் க்ரஷ் சில்வர் கலர் வேரியண்ட்டை ரூ.32,999 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாறுபாடு சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்தின் கீழ் வருகிறது மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் ப்ரிஸம் க்ரஷ் சில்வர், ப்ளூ மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்ஸ் கலர் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹேஸ் க்ரஷ் சில்வர் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் நான்காவது வண்ண விருப்பமாக இருக்கும். வண்ண மாற்றத்தைத் தவிர, புதிய மாறுபாடு முந்தைய வகைகளின் அதே விவரக்குறிப்புகளையும், அம்சங்களையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் & அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஆனது புதிய மேக் இன் இந்தியா அம்சங்களுடன் வருகிறது. இது எஸ்எம்எஸ் இன்பாக்ஸில் "ஒழுங்கீனத்தை" குறைக்க உதவும் கார்ட்ஸ்களை கொண்டுள்ளது. இது நுகர்வோர்கள் தேடும் பயனுள்ள தகவல்களை விரைவாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

மேலும் இது மல்டிலிங்குவல் டைப்பிங் உடன் வருகிறது, இதன் கீபோர்ட் ஆனது பயனர் பயன்படுத்தும் மொழியை தானாகவே கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ71 ஆனது 6.7 இன்ச் அளவிலான முழு எச்டி+ இன்ஃபினிட்டி-ஓ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2400 x 1080 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷனை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புகத்தை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் வழங்குகிறது.

கேமராத்துறையை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ71 ஆனது எல்-வடிவ க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 64 மெகாபிக்சல் அளவிலான மெயின் சென்சார் (எஃப் / 1.8) + 12 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.2) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 5 எம்பி அளவிலான (எஃப் / 2.2) டெப்த் சென்சார் + 5 எம்பி அளவிலான (எஃப் / 2.4) மேக்ரோ லென்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது 32 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை (எஃப் / 2.2) கொண்டுள்ளது. இது ஸ்லோ-மோ செல்பீ அம்சத்துடன் வருகிறது, அதாவது இதன் செல்பீ கேமராவால் ஸ்லோ-மோஷன் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த மொத்த அமைப்பும் ஒரு 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ 2.0 உடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, A-GPS உடன் GPS, GLONASS மற்றும் ஒரு USB Type-C போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது. மேலும் இது சாம்சங் பே, ஆன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களையும் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad