Type Here to Get Search Results !

முரட்டுத்தனமான இன்னொரு கேமிங் போன்; நுபியா ரெட் மேஜிக் 5S அறிமுகம் !!!!



நுபியா தனது புதிய 5 ஜி-இயக்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் ஆன ரெட் மேஜிக் 5 எஸ்-ஐ சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.40,630 க்கு அறிமுகமாகி உள்ளது.

மறுகையில் உள்ள இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 12 ஜிபி ரேம் ஆனது ரூ.47,035 க்கும் (தோராயமாக) மற்றும் இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 16 ஜிபி ரேம் மாடலானது ரூ.53,450 க்கும் (தோராயமாக) அறிமுகமாகி உள்ளது. நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சோனிக் சில்வர் மற்றும் பல்ஸ் என்கிற வண்ணங்களில் வருகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஆனது 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் மற்றும் 19.5: 9 என்கிற திரை விகிதத்துடன் கூடிய 6.65-இன்ச் முழு எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.



இது 2.84Ghz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 7nm ப்ராசசர் மூலம் அட்ரினோ 650 ஜி.பீ.யூ கொண்டு இயங்குகிறது மற்றும் 5 ஜி எஸ்.ஏ / என்எஸ்ஏ டூயல் மோட்-க்கு துணைபுரிகிறது. ரெட் மேஜிக் 5 ஜிஎஸ் ஸ்மார்ட்போன் 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரெட்மேஜிக் ஓஎஸ் உடன் இயங்குகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, 4500mAh பேட்டரி மற்றும் 55W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினை கொண்டுள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஆனது 64 எம்பி அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார், 0.8μ மீ பிக்சல் அளவு, எஃப் / 1.8 லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் + 8 மெகாபிக்சல்கள் 120° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா
அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்களுக்கான 8 மெகாபிக்சல்கள் கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மல்டி டைமன்ஷ்னல் கூலிங் மோட் ICE 4.0-ஐ வெள்ளி பூசப்பட்ட நீராவி அறையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் காற்று குளிரூட்டல் மற்றும் திரவ-குளிரூட்டல் ஆகிய அம்சங்களும் உள்ளன. இதன் குளிரூட்டும் விசிறி ஆனது 30,000 மணிநேர ஆயுட்காலத்தையும் மற்றும் 15,000 ஆர்.பி.எம் வேகத்துடனும் வருகிறது. இது கேமிங்கிற்கான டூயல் ஐசி ஷோல்டர் டச் ட்ரிக்கர் கீஸ்-களையும் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 5G SA / NSA / டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, GPS / GLONASS / Beidou, NFC, யூஎஸ்பி டைப்-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 168.56 x 78 x 9.75 மிமீ மற்றும் 220 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad