Type Here to Get Search Results !

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று !!!! தமிழ் சினிமாவில் நட்பை கொண்டாடிய 5 படங்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு !!!!!




இன்று ஜூலை 30, 2020, சர்வதேச நண்பர்கள் தினம். அப்பா, அம்மா குடும்பத்தினர் என்ற உறவை தாண்டி நாமாக உருவாக்கிக் கொள்ளும் ஒரு உறவு தான் நட்பு. அதை பெருமை படுத்தும் விதமாக தான் இந்த நாள் கொண்டாட படுகிறது. தமிழ் சினிமாவில் காதல் உணர்ச்சி, குடும்ப சென்டிமென்ட் ஆகியவை பற்றித் தான் படங்கள் எடுக்கப் படுகின்றன. காதலை கொண்டாடும் வகையில் நிறைய படங்கள் எடுக்கப் பட்டாலும் நட்பை கொண்டாடும் விதத்தில் சில படங்களும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. இன்று சர்வதேச நண்பர்கள் தின ஸ்பெஷலாக நட்பை கொண்டாடிய சில தமிழ் படங்கள் பற்றி பார்ப்போம்.

தளபதி:



மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் நட்பிற்கு சிறந்த இலக்கணமாக தற்போதும் இருந்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். காதல், தாய் அன்பு உட்பட பல விஷயங்கள் பற்றி இந்த படம் பேசி இருந்தாலும், நட்பை இயக்குனர் மணிரத்னம் காட்டி இருந்த விதம் தான் தற்போதும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.

என்றென்றும் புன்னகை:



ஜீவா, சந்தானம், வினய் நடித்து இருந்த இந்த படத்தில் நட்பு, அதன் பிரிவால் வரும் வலி ஆகியவற்றை மிக அழகாக காட்டி இருந்தனர். நண்பர்கள் சந்தோசமாக இருந்தால் அவர்கள் அடிக்கும் லூட்டி மற்றும் அதுவே அவர்கள் சண்டை போட்டு பிரிந்துவிட்டால் வாழ்க்கை எப்படி நரகம் போலவே இருக்கிறது என திரையில் நம் முன் கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் அஹ்மத். திருமணமே வேண்டாம் என இருக்கும் மூன்று நண்பர்கள் எப்படி பின்னர் மனம் மாறி திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

நண்பன்:



விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து இருந்த இந்த படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார். நண்பன் படம் உண்மையில் ஹிந்தியில் உருவான 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான். நட்புக்கு இலக்கணமாக இந்த படம் இல்லாவிட்டாலும், நட்பை கொண்டாடிய படங்களில் மிக முக்கியமானது இந்த படம். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளுடன் ஒரு இன்ஜினியரிங் கல்லூரிக்கு வரும் 3 பேரை பற்றியது தான் இந்த படம். கல்லூரி படிப்பிற்கு பிறகு யாருடனும் தொடர்பில் இல்லாத ஒரு நண்பனை மற்ற இருவரும் தேடி செல்லும் போது இதற்கு முன்பு அவர்கள் கல்லூரி வாழ்க்கையில் நடந்ததை பிளாஷ் பேக் காட்சிகளாக அவர்கள் அசை போடும் விதத்தில் கதை இருக்கும்.


பிரியமான தோழி:



நட்பு என்றால் ஆணுக்கும் ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் தான் இருக்கனுமா, ஒரு ஆணும் பெண்ணும் கூட நண்பர்களாக இருக்கலாம் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்த படம் பிரியமான தோழி. மாதவன், ஸ்ரீதேவி விஜயகுமார், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் 2003ல் வெளிவந்தது.

நாடோடிகள்:



2009ல் வெளிவந்த இந்த படத்தினை சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். சசிகுமார், பரணி, விஜய் வசந்த உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்.. என சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் நட்பை பற்றிய வசனங்களால் நம் இதயத்தை பிழிந்திருப்பார்கள். சசிகுமார் படம் என்றால் அதில் நட்புக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணமாக இருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad