Type Here to Get Search Results !

ரேசன் கடைகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இலவச மாஸ்க்குகள் வழங்கப்பட இருக்கின்றது,விவரங்கள் உள்ளே !!!



தமிழக அரசு சார்பில் இலவசமாக கொடுக்கப்படும் முக கவசங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். 

குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன்கள் ஆகஸ்ட் 1முதல் 3ஆம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி தவிர பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. 

இந்த முக கவசங்கள் ஆகஸ்ட் 5 முதல் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய்த் தடுப்பு பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். முதல்வரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் மட்டும் 83 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஆடி மாதம் கோவில்களில் மக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ரேசன் கடைகளில் இலவச பொருட்களை வாங்குவதற்காக ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் கொடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 5 முதல் இலவச பொருட்களை வாங்கலாம் என்றும் தெரிவித்தார்.

இலவச பொருட்களுடன் முக கவசமும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad