இன்று அறிமுகமாகும் ஒப்போ ரெனோ 4 ப்ரோவின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் !!!!இந்தியாவில் ஒப்போ நிறுவனம் தனது ரெனோ தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அது ஒப்போ ரெனோ 4 ப்ரோ மாடல் ஆகும், இது நாட்டில் நாளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.


ஒப்போ ரெனோ 4 ப்ரோவுக்கான ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்) வெளியீட்டு நிகழ்வை ஒப்போ நடத்தவுள்ளது. இது ஒன்பிளஸ் நோர்ட் அறிமுக விழாவில் நாம் பார்த்ததைப் போலவே இருக்கலாம். இந்நிகழ்வு நாளை மதியம் 12:00 மணி முதல் தொடங்குகிறது. இந்நிகழ்வு ஒப்போ நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ்ஸ்ட்ரீம் செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை:

இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.40,470 என்றும், 256 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 12 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.45,790 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம். அதாவது இந்திய விலை நிர்ணயமானது சுமார் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 இயக்க முறைமை
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம்
- 6.5 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- லேசர் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் ஆதரவு
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- சிங்கிள் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்
- 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,000mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- ப்ளூடூத்
- 5ஜி ஆதரவு
- வைஃபை
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 ஓஎஸ்
- டிஸ்பிளேவின் மேல் இடதுபுறத்தில் டூயல் செல்பீ ஹோல்-பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பு
- 6.4 இன்ச் புல் எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2 மெகாபிக்சல் சிங்கிள் கலர் சென்சார்
- லேசர் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் ஆதரவு
- டூயல் செல்பீ கேமரா அமைப்பு
- 32 மெகாபிக்சல் அளவிலான பிரதான செல்பீ கேமரா
- 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை செல்பீ ஷூட்டர்
- 4,020 எம்ஏஎச் பேட்டரி
- 65W சூப்பர் வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
-இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- ப்ளூடூத்
- 5ஜி ஆதரவு
-வைஃபை
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url