Type Here to Get Search Results !

Redmi Note 8, Redmi 8 & Redmi 8A Dual ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்தன!

Redmi Note 8, Redmi 8 & Redmi 8A Dual ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்தன!
Redmi Note 8, Redmi 8 & Redmi 8A Dual போன்களின் விலையை ஷாவ்மி அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த போன்கலின் விலை அதிகரிப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 8-ன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் விலை ரூ.300 அதிகரித்துள்ளது. இந்த ஷாவ்மி போன்கள் புதன்கிழமை முதல் புதிய விலையில் கிடைக்கின்றன. இந்த போன்கள் எம்ஐ.காம், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைகளை அதிகரிப்பது குறித்து நிறுவனம் தனது சில்லறை கடை கூட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.

இனிமேல் Redmi Note 8-ன் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.11,499 ஆக இருக்கும். இதன் முந்தைய விலை ரூ.10,999 ஆகும். நிறுவனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலையை ரூ.500 அதிகரித்துள்ளது. ரெட்மி நோட் 8-ன் 6 ஜிபி ரேம் வேரியண்ட் முன்பு போலவே ரூ.13,999-க்கு விற்கப்படும். இந்த போன் கடந்த ஆண்டு ரூ.9,999 ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் அதன் விலையை ரூ.1,500 அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் ஸ்மார்ட்போன்களில் ஜிஎஸ்டி அதிகரித்ததன் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் Amazon India மற்றும் Mi.com-ல் புதிய விலைக்கு கிடைக்கிறது.

இதேபோல், Redmi 8-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இப்போது ரூ.9,299 ஆகிவிட்டது. கடந்த மாதம் இதன் விலை ரூ.8,999 ஆகும். அதாவது, ரூ.300 அதிகமாகும். ரெட்மி 8 கடந்த ஆண்டு ரூ.7,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி Mi.com மற்றும் Flipkart-ல் கிடைக்கிறது.

இறுதியாக, Redmi 8A Dual-ன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.7,299-க்கு வாங்க முடியும். இதன் விலையும் ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போன் Mi.com மற்றும் Amazon India-வில் புதிய விலையில் கிடைக்கிறது. இந்த போன் ஆரம்ப விலை ரூ.6,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, இதுவரை மொத்தம் ரூ.800 அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,999-க்கு கிடைக்கும். இந்த வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad