Type Here to Get Search Results !

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? ரேஷன் கடைகளில் ஜூன் மாதமும் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? ரேஷன் கடைகளில் ஜூன் மாதமும் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படுகிறது. சென்னையில் புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவது ஏன்? என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

தொலைக்காட்சியில் இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் பழனிசாமி கூறுகையில், “ அதிகமான மக்கள் நிறைந்த நகரம் என்பதால் சென்னையில்  நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை  அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது” என்றார்.

* மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கொரோனா தடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைக்க 12 உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


* தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

* சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் கொரோனா பரவலை தடுப்பது சவாலாக உள்ளது. மேலும் சென்னையில் மட்டும் கொரோனா பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

* மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம், தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

* தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக அரசி மத்திய சுகாதாரக்குழு பாராட்டியுள்ளது.

* கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

* அதிக எண்ணிக்கையில் சோதனை நடத்தப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

* சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

* தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

* தமிழகத்தில் யாரும் பட்டினியுடன் இல்லை எனும் நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

* அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்.

* கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

* நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே நேரடியாக செல்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad