Type Here to Get Search Results !

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்; மத்திய அரசின் அறிவுரைகளை பின்பற்ற தமிழக அமைச்சரவை முடிவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்; மத்திய அரசின் அறிவுரைகளை பின்பற்ற தமிழக அமைச்சரவை முடிவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  பின்னர் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். என்றாலும் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. இதைத்தொடர்ந்து மே 3-ந் தேதி (நாளை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கின. ஊரடங்கை  தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே, மத்திய அரசால் விதிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு  நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதில், நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில்  பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமையில் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்கள் மட்டும் தலைமை செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, அனைத்து மண்டலங்களிலும் சீல் வைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 6 அடி இடைவெளியுடனும், ஒரே நேரத்தில் 5 பேருடன்  மட்டுமே மதுக்கடைகள் செயல்படலாம். எனினும், இது தேசிய அளவிலான அனுமதிதான் என்பதால், இதுகுறித்து மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கை மத்திய அரசு நேற்று நீட்டித்து உத்தரவிட்ட நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு  அறிவித்த தளர்வுகளை தமிழக அரசு பின்பற்ற முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டுகளை தொடர தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில்,  தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் முடிவுக்கு   தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும். சிறு குறுதொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad