Type Here to Get Search Results !

இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை; இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு தான்; ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு சிறப்பு தூதர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை
இவான்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது வெள்ளை மாளிகை ஊழியராக அவர் உள்ளார். என்று ஒரு ஊடக அறிக்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட வகையில் அவர்  உதவியாளராக இருந்தார். ஆனால் பலவாரங்களாக அவர் இவான்கா டிரம்புடன் இல்லை.

ஏறக்குறைய இரண்டு மாதங்களாக அவர் தொலைபேசியில் பணிபுரிந்து வருகிறார், அவர் எச்சரிக்கைக்காக சோதனை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை இல்லத்தில் ஊழியர்கள் முககவசங்கள் அணிவதை இப்போது வெள்ளை மாளிகை உறுதி செய்து வருகிறது, மேலும் மேற்கு பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் சோதனைகள் மற்றும் வெப்பநிலை சோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. வெஸ்ட் விங்  அடிக்கடி சுத்திகரிக்கப்படுகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்தும் பென்ஸ், சமீபத்தில் மாயோ கிளினிக்கிற்கு முககவசம் அணியாமல் பயணம் மேற்கொண்டார்.

அரிசோனாவில் முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலை சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப் முககவசம் அணிய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு தான்; ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு சிறப்பு தூதர்
இந்தியா விரைவாகச் செயல்பட்டதால் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளே பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்து உள்ளார்.

இது குறித்து டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது:-

இந்த தொற்றுநோய் அடங்குவதற்கு முன் ஜூலை மாதம் இறுதியில் நாட்டில் உச்சத்தை காட்டும். ஊரடங்கை நீக்கும் போது, அதிகமான பாதிப்புகள் இருக்கும்.ஆனால் மக்கள் பயப்படக்கூடாது. வரும் மாதங்களில் (பாதிப்புகளின் எண்ணிக்கை) அதிகரிக்கும். ஆனால் இந்தியாவில் ஸ்திரத்தன்மை இருக்கும்.

ஊரடங்கு  காலத்தில் அவ்வப்போது பாதிப்பு அதிகரிக்கும். அதன்பின்னர், பாதிப்பு அடங்கும். ஜூலை இறுதியில், ஒரு உச்சம் இருக்கும்.

இந்தியா அதன் விரைவான நடவடிக்கையின் காரணமாக, தொற்றுநோயை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.

ஊரடங்கால் வைரஸை சில குறிப்பிட்ட இடங்களில் நியாயமான முறையில் வைத்திருக்க முடிந்தது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில்  சில நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.

இந்தியா விரைவாகச் செயல்பட்டதால், பெரும்பாலான அமைப்புகளில் நீங்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அடர்த்தியான அமைப்பில் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெரியது, ஆனால் நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது மிகப் பெரியது அல்ல. வைரஸைக் கட்டுப்படுத்துவது கடினம்.

வயதானவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  இந்தியா வேறுபட்ட வயதுக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், நாட்டில் மொத்த இறப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

வயதான மக்கள் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெப்பமான காலநிலையில், வைரஸ் மிக விரைவாக பரவாது. இந்தியாவில் இது மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad