Type Here to Get Search Results !

பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை - தந்தை, பாட்டி கைது; மதுரையில் கள்ளக்காதலனுடன் தங்கை கொலை - ஒன்றிய கவுன்சிலர் கைது

பச்சிளம் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை - தந்தை, பாட்டி கைது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத்தெருவை சேர்ந்தவர் தவமணி. மதுரையில் தனியார் லாரி நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றி வருகிறார். தவமணிக்கும் சித்ரா என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. தன் குடும்பத்திற்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதில் தவமணியின் தாய் பாண்டியம்மாள் உறுதியாக இருந்தார்.

மதுரை அருகே நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை தாய்க்கு தெரியாமல் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் 4-வதாக கர்ப்பம் அடைந்த சித்ராவுக்கு, கடந்த 10-ந் தேதி மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் தனது வீட்டுக்கு குழந்தையுடன் வந்தார். இந்தநிலையில் பிறந்த 5-வது நாளில் அந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது. உடலை சோழவந்தான் பழைய காவலர் குடியிருப்பின் பின்பக்கம் கருவேல மரம் அருகே புதைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே குழந்தை மர்ம சாவு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தையின் தந்தை தவமணி, அவருடைய தாயார் பாண்டியம்மாள் ஆகியோர், “தாங்கள்தான் குழந்தையை கொன்று புதைத்தோம்” என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தவமணிக்கு 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கொன்று விடுவது என கொடூர முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தையை சித்ரா தூங்க வைத்துவிட்டு, மற்ற 3 குழந்தைகளுடன் வீட்டின் வெளியில் இருந்தார். அந்த சமயம் தவமணி, அவரது தாயார் பாண்டியம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு பாட்டிலில் கள்ளிப்பாலுடன் வந்தனர். அந்த பாலை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். பின்பு குழந்தையின் கால்களை பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளனர். இந்த கொடூர செயலால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்தது. பின்னர் பழைய காவலர் குடியிருப்புக்கு பின் பகுதியில் கருவேலம் மரங்களுக்கு அடியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்துள்ளனர்.

இவ்வாறு திடுக்கிடும் தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பச்சிளம் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்தும், தரையில் அடித்தும் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாது என நினைப்பவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். அந்த குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கலாம். நாங்கள் அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவோம். ஏற்கனவே உசிலம்பட்டி பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. குழந்தையை கொலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலர் குழந்தைகளை எங்களிடம் ஒப்படைத்தனர்.

உடல்நலக்குறைவால் குழந்தை இறந்ததாக நாடகமாடி அருகில் குழந்தையை புதைத்துள்ளனர். தகவல் அறிந்து விஏஓ அளித்த புகாரின் பேரின் ஆர்டிஓ முருகானந்தம் தலைமையில் மருத்துவ குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டிய பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தவமணி மற்றும் பாண்டியம்மாள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இவரையும்  கைது செய்த  சோழவந்தான் போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையும் பாட்டியும் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கள்ளக்காதலனுடன் தங்கை கொலை - ஒன்றிய கவுன்சிலர் கைது
மதுரையில் தங்கையின் தகாத உறவை பொறுத்து கொள்ள முடியாமல் அவர் விரும்பியவரையும் சேர்த்து இருவரை கொலை செய்த  தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆயம்மாள். அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் இரு ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளன. தம்பதிகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக கணவரை பிரிந்த ஆயம்மாள், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் ஆயம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பைக்கில் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இதனால் கிராமத்தில் அவர்களை பற்றி கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் தனக்கு களங்கம் ஏற்படுவதாக நினைத்த ஆயம்மாளின் சகோதரரும், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலருமான தமிழ்மாறன், இருவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

நேற்று மதுரை அருகே திருவாதவூருக்கு ஆயம்மாளும்-அன்புநாதனும் பைக்கில் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முன்கூட்டியே அதை நோட்டமிட்ட தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறன், தனது உறவினர்களான ராஜா என்ற அய்யனார் மற்றும் சதீஷ் ஆகியோர் உதவியுடன் நல்லான்பெத்தான் கண்மாய் சாலையில் வரும்போது இருவரையும் வழிமறித்து கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலூர் டி.எஸ்.பி., தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தலைமறைவாக இருந்த தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மாறன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad