போருக்கு தயார் ஆகுங்கள் !! சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்பெய்ஜிங்: இந்தியா சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் போருக்கு தயார் ஆகுங்கள் என்று சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் காரணமாக பிரதமர் மோடி தற்போது அவசர மீட்டிங் நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்று இருக்கிறார்கள். சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முக்கியமான ராணுவ படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார். குவிக்கப்பட்ட சீன விமானங்கள்.. மோடியின் அவசர மீட்டிங்.. சீனா - இந்தியா இடையே போர் மூளும் அபாயம்? முக்கிய விஷயம் சொன்னார் இதில் பல முக்கிய விஷயங்களை ஜி ஜிங்பிங் பகிர்ந்து கொண்டார். அதில், சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார் ஆக வேண்டும். அவர்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவை காக்க, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தயார் நிலை போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். நாம் கொரோனாவை வென்றுவிட்டோம். இதற்கு ராணுவத்தின் தீவிரமான செயல்படும், ராணுவத்தை மையமாக கொண்ட ஆட்சியும்தான் காரணம். அதை நாம் தொடர வேண்டும். வித்தியாசமான பயிற்சி நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவர் தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் கூறவில்லை. இந்தியாவிற்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. அதேபோல் மற்ற நாடுகள் குறித்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் பதற்றம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதேபோல் சீனாவிற்கு எதிராக தைவான் புரட்சி செய்து வருகிறது. சீனாவிற்கு உள்ளேயே ஹாங்காங் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது. மேலும் தென் சீன எல்லையில் மலேசியா, அமெரிக்கா சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இப்படி பேசி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

முக்கிய விஷயம் சொன்னார் இதில் பல முக்கிய விஷயங்களை ஜி ஜிங்பிங் பகிர்ந்து கொண்டார். அதில், சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார் ஆக வேண்டும். அவர்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவை காக்க, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தயார் நிலை போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். நாம் கொரோனாவை வென்றுவிட்டோம். இதற்கு ராணுவத்தின் தீவிரமான செயல்படும், ராணுவத்தை மையமாக கொண்ட ஆட்சியும்தான் காரணம். அதை நாம் தொடர வேண்டும்.


வித்தியாசமான பயிற்சி நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவர் தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் கூறவில்லை. இந்தியாவிற்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. அதேபோல் மற்ற நாடுகள் குறித்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பதற்றம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதேபோல் சீனாவிற்கு எதிராக தைவான் புரட்சி செய்து வருகிறது. சீனாவிற்கு உள்ளேயே ஹாங்காங் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது. மேலும் தென் சீன எல்லையில் மலேசியா, அமெரிக்கா சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இப்படி பேசி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )