Type Here to Get Search Results !

பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் - அதிமுக பிரமுகர்கள் கைது; செங்குன்றம் அருகே, பிரபல ரவுடி வெட்டிக்கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் - அதிமுக பிரமுகர்கள் கைது
விழுப்புரம் அருகே சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த, அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று அவரது வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் மாணவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் அருகே, பிரபல ரவுடி வெட்டிக்கொலை
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால கணேஷ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மணி என்ற கஞ்சா மணி(வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளும், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ரவுடி மணி நேற்று மாலை செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள்கோவில் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணியை சுற்றி வளைத்தது. இதனால் பயந்துபோன அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம கும்பலிடம் அவர் தனியாக சிக்கிக்கொண்டார்.

மர்ம நபர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் மணியை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மணி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர், இறந்துவிட்டதை உறுதிசெய்த அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் கொலையான மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இவருக்கும், எதிர்கோஷ்டியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடி ஒருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக மாமூல் பிரச்சினையில் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad