Type Here to Get Search Results !

68000 கோடி வராக்கடன் தள்ளுபடியை தொடர்ந்து 20 லட்சம் கோடி தனியார் வசமாக்கபடுகிறது: தனியார் இந்தியா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

68000 கோடி வராக்கடன் தள்ளுபடியை தொடர்ந்து 20 லட்சம் கோடி தனியார் வசமாக்கபடுகிறது: தனியார் இந்தியா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் முதலீடு: தனியார் இந்தியா மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
முதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:நிலக்கரி:  நிலக்கரி இறக்குமதியை குறைந்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்க,  இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, பல்வேறு துறையினருக்குச் சலுகைகள் புதிய திட்டங்களை நிதி அமைச்சர் கடந்த மூன்று தினங்களாக அறிவித்து வருகிறார். 4-வது நாளாக இன்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நிதி அமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். முதல்
கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்காக நிலக்கரி துறையின் கட்டமைப்பை மேம்படுத்த ₹50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* நிலக்கரி சுரங்க ஏல முறை, வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றப்படும். டன் ஒன்றுக்கு இவ்வளவு என்ற கட்டணம் நிர்ணய முறை நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் முடியும்.

* நிலக்கரி சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயுவும் ஏலத்தில் விடப்படும்.

கனிமங்கள்: கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்.

* அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

* சுரங்க துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

விமான போக்குவரத்து: இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதன் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை ₹1,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 விமான நிலையங்களில் 3 விமான நிலையங்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு 2,300 கோடி நிதி உதவி கிடைக்கும்.

* 12 விமான நிலையங்களில் தனியார்கள் கூடுதல் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம், ₹13,000 கோடி வரையில் முதலீடு கிடைக்கும். 2ம் கட்டமாக மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தேர்வு செய்யப்படும்.
சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள்: சமூக உள்கட்டமைப்பு தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இதற்கான திட்டம் விரைந்து முடிக்கப்படும். இதற்காக 8,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இத்திட்டங்களுக்காக அரசு தரப்பிலிருந்து தரப்படும் 20 சதவீத நிதியுதவி 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
விண்வெளி: விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படும். செயற்கை கோள், ஏவுதல் மற்றும் விண்வெளி தொடர்பான சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.

* இஸ்ரோவின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.

அணுசக்தி: மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும்.  வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவும்  வகையிலும், உணவு பாதுகாப்பிற்காக கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.

* அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க, தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும்.

யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு
* புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம், மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்.

* மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.

ராணுவ தளவாட உற்பத்தி
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைய சீர்த்திருத்தம் செய்யப்படும்.
* குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து  உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது இறக்குமதி செலவை பெருமளவு குறைக்க உதவும்.
* ராணுவ தளவாடங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்

சீர்திருத்தங்கள் அவசியம்
தற்சார்பு தொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “தற்சார்பு இந்தியா என்பது இந்தியா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டமல்ல. நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற, கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்கவே பிரதமர் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவை இதில் குறிப்பிடத்தக்க திட்டங்களாகும். நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது,’’ என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad