Type Here to Get Search Results !

5 காவலர்களுக்கு கொரோனா உறுதி; சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது; ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

5 காவலர்களுக்கு கொரோனா உறுதி; சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது
5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் உள்பட அனைத்து வகையான ரெயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் ரெயில்கள் பறக்கும் ரெயில் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இவற்றில் சென்னை மயிலாப்பூரை அடுத்த மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையத்தில், பணியாற்றி வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அவர்கள் 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடப்பட்டது.  தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை விதிகளின்படி, 28 நாட்களுக்கு அந்த பகுதி வழியே ரெயில் சேவை ரத்து செய்யப்படும்.  இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான பகுதிகளில் 28 நாட்களுக்கு ரெயில் சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 70756 ஆக உயர்ந்து உள்ளது, 2,293 இறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் அதிக அறிகுறிகள் இல்லாத பாதிப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், மாவட்ட அளவில் சோதனைகளை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட அளவிலான நாட்டில் சோதனை அதிகப்படுத்தப்படும்  நாட்டில் வைரஸ் பரவுவது குறித்து அறிய வாரத்திற்கு 200 சோதனைகள் மற்றும் மாதத்திற்கு 800 சோதனைகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு கொரோனா வைரஸ் அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு இந்த சோதனைகள் செய்யப்படும், இது அறிகுறியற்ற நிகழ்வுகளைக் கண்டறிய உதவும்.

சோதனை இலக்கை நிறைவேற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்ய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழு மற்றும் குறைந்த ஆபத்துள்ள குழு என மாதிரியை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளது.

அதிக ஆபத்துள்ள குழுவில் சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது மற்றும் சோதனைத் திட்டம் வாரத்திற்கு குறைந்தது 100 மாதிரிகள் மாதத்திற்கு 400 மாதிரிகள் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மறுபுறம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குளிர் இருமல் மற்றும் சளி இல்லாதவர்கள் குறிப்பாக அறிகுறியற்றவர்கள் குறைந்த ஆபத்துள்ள குழுவின் கீழ் வகைப்படுத்தப்படுவார்கள். இந்த வகையில் 400 மாதிரிகள் ஒவ்வொரு மாதமும் சேகரிக்கும் இலக்கை அமைச்சகம் நிர்ணயித்து உள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் இந்த திட்டத்தின் மூலம், நோய்த்தொற்றின் அறிகுறிகள் இல்லாத கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் ஒரு மாதத்தில் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படுவார்கள்.

ஒரு நேரத்தில் 25 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட மாவட்ட அளவில் கண்காணிப்புக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்யப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad