Type Here to Get Search Results !

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48.87 லட்சத்தை தாண்டியது; ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை எடுத்து வருகிறேன்-டொனால்டு டிரம்ப்

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48.87 லட்சத்தை தாண்டியது
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் அமெரிக்க வல்லரசு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அந்த நாடு தொடர்ந்து கொரோனாவின் பிடியில்தான் இருந்து வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 319,960 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,887,940 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,904,693 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,760 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,029 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 36,824 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 91,976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,550,116 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,007 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225,886 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,709 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 278,188 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,722 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,678 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,239 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,927 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,796 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை246,406 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,057 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122,492  ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,080 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,559 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,123 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177,289 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,694 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,141 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,954 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 4,171 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,886 பேரும், பிரேசில் நாட்டில் 16,853 பேரும், சுவீடன் நாட்டில் 3,698 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,842 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,547 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,177 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,231 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.


ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை எடுத்து வருகிறேன்-டொனால்டு டிரம்ப்
கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்  பாதிப்பு எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதல்ல என்று தனது சொந்த அரசின் வல்லுநர்கள் கூறும் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தான் சாப்பிட்டு வருவதாக  என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி

கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் டிரம்ப்  ஆர்வம் காட்டி வருகிறார், சில மருத்துவர்கள் இது கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக வேலை செய்யும் என்று நினைத்தாலும், அமெரிக்க அரசாங்க  மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இது பாதுகாப்பாக இருப்பதாக நிருபிக்கப்படவில்லை என்று எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப்

வைரஸுக்கு எதிர்மறையையாக பரிசோதனை செய்து உள்ளேன்.எனக்கு அறிகுறிகளைக் காட்டவில்லை சுமார் ஒன்றரை வாரங்களாக ஒரு தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்தை உட்கொண்டுவருகிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் என கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு ஏனென்றால் இது நல்லது என்று நான் நினைக்கிறேன், நான் நிறைய நல்ல கதைகளைக் கேட்டிருக்கிறேன்."

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எத்தனை பேர்  எடுத்துக்கொள்கிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், குறிப்பாக முன் வரிசை ஊழியர்கள் பலர்  அதை எடுத்துக்கொள்கிறார்கள், நான் அதை எடுத்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad