Type Here to Get Search Results !

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.99 லட்சத்தை தாண்டியது; கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது- டிரம்ப் டுவிட்

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47.99 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.16 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 316,519 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,799,266 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,856,566 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,823 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் அமெரிக்க வல்லரசு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அந்த நாடு தொடர்ந்து கொரோனாவின் பிடியில்தான் இருந்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள்  எண்ணிக்கை  1,527,664 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் 90,978-பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பது அமெரிக்க மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை  3,46,389- ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,872 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 34,109 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 90,978 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,527,664 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,908 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225,435 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,650 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 277,719 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 281,752 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,108 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,569 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,636 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243,695 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120,198 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,052 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,280 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,049 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176,651 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,680 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,995 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,947 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 4,140 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,881 பேரும், பிரேசில் நாட்டில் 16,118 பேரும், சுவீடன் நாட்டில் 3,679 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,782 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,543 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,045 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,218 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது-  டிரம்ப் டுவிட்
உலக அளவில்  வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.  அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா விழிபிதுங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு  820 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில்  கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “  சில விதி விலக்குகளை தவிர அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சரியத்தொடங்கியுள்ளது.  இது உண்மையாக நல்ல விஷயம் தான்” என்று  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad