Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 477 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 477 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பரிசோதனை செய்வதன் மூலம் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறிய முடிகிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்திய அளவில் நேற்று நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில்  இன்று மேலும் 477-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த 384 பேருக்கும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 93-பேருக்கும் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,585-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்  இதுவரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 -ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,585 - ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970-லிருந்து 85,940-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649-லிருந்து 2,752-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920-லிருந்து 30,153-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,538 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 939 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 61 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கண்டு அச்சப்பட வேண்டாம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

* தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக கட்டுக்குள் உள்ளது.

* தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.

* ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 44 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,535 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 447 பேருக்கு தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 939 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 939 பேர் மீண்ட நிலையில் இதுவரை 3,538 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad