Type Here to Get Search Results !

சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு: புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியா? போலீஸ் விசாரணை; கோவையில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் உள்பட 3 பேர் கைது கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலம்

சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு: புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியா? போலீஸ் விசாரணை
சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசி மீது மேலும் புகார் கொடுப்பதை தடுக்க முயற்சியாக வெளியிடப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் பல பெண்களுடன் பழகி, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்தார். இதைத் தொடர்ந்து காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் சிறுமி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கந்து வட்டி புகாரும் கூறப்பட்டதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது காசியின் நெருங்கிய நண்பர்கள் 2 பேர், காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளி நாட்டில் இருக்கும் மற்றொரு நண்பரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப் டாப்பில் முக்கிய பிரமுகர்களின் மனைவியுடன் காசி எடுத்த வீடியோ படங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காசி, இளம் பெண்ணுடன் ஆடையே இல்லாமல் இருக்கும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. குறிப்பாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு இளம்பெண் ஆடையே இல்லாமல் இருக்கும் படியான வீடியோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வீடியோவில் அந்த பெண் மட்டுமே தெரிகிறார். காசி தெரியவில்லை. இது அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ போல் தெரிகிறது. மேலும் ஒரு சில புகைப்படங்களில் இளம் பெண்ணின் முகம் மட்டும் தெரிகிறது. வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வாறு ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிட்டது யார்? என்று தெரியவில்லை.

காசியின் மீது தற்போது மேலும் பல பெண்கள் புகார் அளிக்க முன் வந்து உள்ளனர். அவர்கள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தால் புகார் அளிப்போம் என்று கூறுகிறார்கள்.

இந்தநிலையில் ஆபாச படம் வெளியாகி இருப்பது, காசி மீது புதிதாக புகார் கொடுக்க வருபவர்களை தடுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்டு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஆபாச படங்கள் வெளியாகி வருவதால் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காசி தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் வீடியோக்கள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊரடங்கை மீறி தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குபதிவு செய்தனர்.

விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று இரவு வரை 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் உள்பட 3 பேர் கைது கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலம்
கோவை சிங்காநல்லூரை அடுத்த படக்கேகவுண்டர் வீதியை சேர்ந்தவர் சித்திரைவேல்(வயது 28). கட்டிட தொழிலாளி. திருமணமாகவில்லை. இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் ஆகும். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் சித்திரைவேல், படக்கேகவுண்டர் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை அடித்து கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார், தலைமை காவலர் சுகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சித்திரைவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல்

சித்திரைவேலுக்கும் அவருடைய அண்ணனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து உள்ளது. இதையடுத்து அந்த கள்ளக்காதலி, தனது கணவரை பிரிந்து சித்திரைவேலுவுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் சித்திரைவேல் தனது நண்பரான வெள்ளலூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ராஜன் (34) என்பவரிடம் தனது கள்ளக்காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு ராஜனுக்கும், சித்திரைவேலுவின் கள்ளக்காதலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கள்ளக்காதலி சித்திரைவேலை விட்டு பிரிந்து ராஜனுடன் சென்றுவிட்டார். இந்த விவகாரம் சித்திரைவேலுக்கு தெரியவந்தது. இதற்கிடையே ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவர் தினமும் குடித்துவிட்டு வந்து கள்ளக்காதலியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இதில் மனவேதனையடைந்த அந்த கள்ளக்காதலி, ராஜனை விட்டு பிரிந்து மீண்டும் தனது கணவரிடம் சென்றுவிட்டார்.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சித்திரைவேல், இது தொடர்பாக தனது நண்பர் ராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜன், செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (29), செல்வக்குமார் (27) ஆகியோருடன் சித்திரைவேல் வீட்டுக்கு சென்றார்.பின்னர் 3 பேரும் சேர்ந்து, அங்கிருந்த சித்திரைவேலை தாக்கி அவரது தலையை பிடித்து, சுவரில் மோதினர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்து இறந்தார். அதன்பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad