Type Here to Get Search Results !

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னையில் இன்று மட்டும் 2 பேர் பலி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 742 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.

தமிழகத்தில் மே 11ம் தேதி உறுதி செய்யப்பட்ட 798 தொற்றுகளில், சென்னையில் 538 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 4,371 பேரில், 743 பேர் குணமடைந்துள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.14 சதவீதம் ஆண்கள், 37.83 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு மார்கெட்டை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று பரவியுள்ளது.

சென்னை கண்ணகிநகரில் கோயம்பேடு மார்க்கெட் சென்ற ஒருவர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புளியந்தோப்பு பகுதிக்கு இறுதி சடங்கிற்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கண்ணகி நகரில் மொத்தம் 14 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:


குணமடைந்தவர்கள்

வயது வாரியாக பார்க்கையில்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 101 பகுதிகளும், திரு.வி.க.நகரில் 94 பகுதிகளும், தேனாம்பேட்டையில் 62 பகுதிகளும், வளசரவாக்கத்தில் 51 பகுதிகளும், தண்டையார்பேட்டையில் 46 பகுதிகளும், அம்பத்தூரில் 33 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.


திருவொற்றியூரில் 27 பகுதிகளும், மாதவரத்தில் 18 பகுதிகளும், அண்ணா நகரில் 13 பகுதிகளும், அடையாறில் 13 பகுதிகளும், பெருங்குடியில் 12 பகுதிகளும், மணலியில் 9 பகுதிகளும், ஆலந்தூரில் 6 பகுதிகளும், சோழிங்கநல்லூரில் 6 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 2 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், நாளுக்கு நாள் இந்த கொலைகார வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவைச் சேர்ந்த 68 வயது முதியவர், நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக முதியவரை மீட்டு அவருடைய மகன், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதியவர், மூதாட்டி சாவு

மேலும் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மாரடைப்பால் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் சென்னை ராயபுரத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் இருதயம் சம்பந்தமான சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad