Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359- ஆக உயர்ந்துள்ளது
சீனாவில் உருவான கோவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில், கொரோனா அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளை போன்று அதிக பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை ஊரடங்கு மத்தியில் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654-பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  6,654‬  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சம் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை   51,784 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 259 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.
பீகாரில் 2177 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 629 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 218 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 178 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 172 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 62 பேர் குணமடைந்தது.

கோவாவில் 54 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 12,319 பேருக்கு பாதிப்பு; 208 பேர் பலி; 5897 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 1067 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 706 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 175 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 152 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 732 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 512 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 6494 பேருக்கு பாதிப்பு; 153 பேர் பலி; 3680 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 308 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 136 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1189 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 436 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2029 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 1847 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 153 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 1743 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 597 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1489 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 720 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1761 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 1043 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 3332 பேருக்கு பாதிப்பு; 265 பேர் பலி; 1221 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2709 பேருக்கு பாதிப்பு; 55 பேர் பலி; 1763 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 6170 பேருக்கு பாதிப்பு; 272 பேர் பலி; 3089 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 5735 பேருக்கு பாதிப்பு; 152 பேர் பலி; 3238 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 168 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad