Type Here to Get Search Results !

ஒரே இரவில் 19 பேர் கொலை: கொடூர இளைஞர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்; மதுரை அருகே பயங்கரம்: நடுரோட்டில் இரட்டைக்கொலை

ஒரே இரவில் 19 பேர் கொலை: கொடூர இளைஞர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்
ஜப்பானில் நள்ளிரவில் முதியோர் இல்லாம் ஒன்றில் புகுந்து 19 ஊனமுற்ற முதியோர்களை தூக்கத்தில் கொலை செய்த கொடூர இளைஞர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் சாகமிஹாரா பகுதி போலீஸ் நிலையம்: 2016 ஜூலை 16 ஆம் தேதி

ரத்தம் சொட்ட சொட்ட கூர்மையான  ஆயுதத்துன் இளைஞர் ஒருவர் சரணடைய வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இளைஞர் பெயர் சதோஷி உமாத்சு 26 வயது   ஜப்பானில் சுகுய் லில்லி கார்டன் என்ற ஊனமுற்றவர்களுக்கான முதியோர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஊனமுற்றவர்களை கண்டால் வெறுப்பு ஏற்படும்.  ஊனமுற்றவர்கள் மீதான வெறுப்பு காரணமாக 2016 பிப்ரவரி மாதம் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.

நான்கு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு தான் வேலை பார்த்த  முதியோர் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்கு  கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.அங்கிருந்த 19 முதியவர்களை கொலை செய்து உள்ளார்.

சம்பவம் நடந்த அன்று  முதியோர் இல்லத்தில் 149 முதியோர்களும் 9 ஊழியர்களும் இருந்துள்ளனர்.நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த முதியவர்களை வரிசையாக கூரான ஆயுதத்தால் கழுத்தை குறிவைத்து தாக்கியுள்ளார்.

இதில் 19 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து நள்ளிரவு 2.50 மணியளவில் போலீசார் வந்து சேர்வதற்குள் உமாத்சு அங்கிருந்து மாயமானான்.மிகவும் ஆபத்தான நகரில் நடமாடுவது போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால் உமாத்சு விடியும்வரை காத்திருந்த பின்னர் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில்  சரணடைந்துள்ளான்.

தன்மை கைது செய்த போலீஸ் அதிகாரிகளிடம், ஊனமுற்றவர்கள் நாட்டிற்கு பாரம், அவர்கள் உயிருடன் இருப்பது வீண் என முணுமுணுத்துள்ளார். முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் சில மாதங்களுக்கு முன்னர், முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்,

ஊனமுற்ற முதியவர்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தானே அந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் உமாத்சு குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, தனது பெயர் முகவரியுடன், தொலைபேசி இலக்கமும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த கடிதம் தொடர்பாக போலீசார் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தியதுடன், உளவியல் சிகிச்சைக்கும் பரிந்துரைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் மார்ச் 2 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட உமாத்சு, சுமார் 146 நாட்களுக்கு பின்னர்  முதியோர் இல்லத்தில் புகுந்து இந்த  கொடூர திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஹிட்லரின் பாணியை பின்பற்றியதாக கூறிய உமாத்சு, தாம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என விசாரணையின் போது தெரிவித்துள்ளான். கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கிய நிலையில், உமாத்சு மீது 19 கொலை வழக்கும் 26 கொலை முயற்சி வழக்கும் நிரூபிக்கப்பட்டன.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமாத்சு, தமது நாளை எண்ணி ஜப்பானில் உள்ள சிறை ஒன்றில் காத்திருக்கிறார்.

மதுரை அருகே பயங்கரம்: நடுரோட்டில் இரட்டைக்கொலை
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்காதல் ஜோடியை வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் இருந்து தெற்கு தெரு செல்லும் நாயக்கர்பட்டி ரோட்டில் பெரிய கண்மாய் மடை உள்ளது. அதன் அருகே நேற்று காலை 8 மணி அளவில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

கழுத்து அறுபட்டும், கை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உடல்கள் கிடந்தன. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது. அவர்கள் இருவரும் தெற்குதெரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அய்யணன் மகன் அன்புநாதன் (வயது 27), விமல் மனைவி ஆயம்மாள்(26) என்றும் தெரியவந்தது.

அன்புநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆயம்மாளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானதும், அவர்கள் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்காதலை கைவிடாத அன்புநாதனையும், ஆயம்மாளையும் தீர்த்துக்கட்டுவதற்காக ஒரு கும்பல் திட்டம் தீட்டி கண்காணித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்தொடர்ந்து சென்றோ அல்லது தனியாக வரவழைத்தோ படுகொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவருகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறனும், உறவினர்களும் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழ்மாறன்(29) மேலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ஆவார். யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்றும் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

சம்பவ இடத்தில் கிடந்த அன்புநாதனின் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடைசியாக அவர் செல்போனில் யார்-யாரிடம் பேசியுள்ளார் என விசாரித்து கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சண்முகபாண்டியன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad