Type Here to Get Search Results !

கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 122 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 161 ஆக உயர்வு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 122 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 161 ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 39 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்த சிலர் கடலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சி.என்.பாளையம், சிறுகிராமம், புதுகுப்பம் மற்றும் பட்டீஸ்வரம் பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கல்லூரி மற்றும் விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களின் சிலரது பரிசோதனை முடிவும் நேற்று வந்தது. இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் படுகளாநத்தத்தை சேர்ந்த 4 பேர், முகுந்தநல்லூர் மற்றும் ஆலடியை சேர்ந்த தலா ஒருவர், வேப்பூர் அடுத்த அரியநாச்சியை சேர்ந்த ஒருவர் ஆவர்.

இது தவிர பண்ருட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது மகன், மருமகளுக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து கடலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இதில் மூதாட்டியின் பேத்தியான 11 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்பு கட்டை மற்றும் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தி, ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad