Type Here to Get Search Results !

சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமை- மாநகராட்சி அதிரடி; அண்ணாநகரில் அபார்ட்மெண்ட்டில் 3 பேருக்கு கொரோனா: லிப்ட் மூலம் பரவுகிறதா?

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமை-  மாநகராட்சி அதிரடி
தமிழகத்தில் தலைநகர்  சென்னையில்தான்  கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.   மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   விதிகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “ சென்னையில் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.  விதிகளை மீறும் கடை, நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.  தனிமனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம்  ஒரு மீட்டர் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விதியை மீறி நடந்தால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அவர், தனி மனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினமும் அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது வரை 906 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இந்த கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது;

* சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

* விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பஸ் தங்குமிடங்கள், ஆட்டோ நிலையங்கள் மற்றும் பொது அரங்குகள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

* ஷாப்பிங் மால்கள், பொது பூங்காக்கள், தீம் பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், திருமண அரங்குகள், வங்கிகள், ஏடிஎம்கள், நிதி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், மருத்துவ கடைகள், பி.டி.எஸ் கடைகள், பால் சாவடிகள், பேக்கரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் பிற கடைகள், சந்தை இடங்களில் அரிசி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பழ கடைகள், சிக்கன் கடைகள் , மட்டன் கடைகள், மீன் கடைகள் மற்றும் அசைவ விற்பனையான பிற கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

* வேலை செய்யும் இடத்தில் கை கழுவும் வசதி மற்றும் சானிடைஸர் வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தப்பட்டபடி சுத்திகரிக்கப்பட வேண்டும் மற்றும் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து நிறுவனங்களும் அடிக்கடி கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

* விதிகளை மீறிய  கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

* ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 1% ஹைபோகுளோரைட் கரைசலையும், 2.5% லைசோலையும் கலந்து கிருமிநீக்கம் செய்யவேண்டும்.

* 2 நபர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தின் சமூக தூரம் இருக்க வேண்டும்.

* வேலை செய்யும் மற்றும் வளாகத்திற்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயமாக மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

* கட்டாயமாக நுழைவாயிலில் சானிடைஸர் வசதி வைக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை சானிடைஸர் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

அண்ணாநகரில் அபார்ட்மெண்ட்டில் 3 பேருக்கு கொரோனா: லிப்ட் மூலம் பரவுகிறதா?
அண்ணாநகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் காவல் ஆய்வாளர் ஒருவரின் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு கடுமையாக இருந்தாலும், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு, கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 60வயது முதியவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை மொத்தம் மூன்று பேருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் லிப்ட் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad