Type Here to Get Search Results !

ஜூன் 1 முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும்: விரைவில் ஆன்லைன் முன்பதிவு

ஜூன் 1 முதல் தினமும் 200 ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும்: விரைவில் ஆன்லைன் முன்பதிவு
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கால்  நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு  தொடங்குகியது

ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.

இந்த சிறப்பு ரெயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நேற்று ரெயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்ட  ஒரு டுவீட்டில், ரெயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களைத் தவிர, "ஜூன் 1 முதல் தினமும் 200 கூடுதல் கால அட்டவணை ரெயில்களை இயக்கும், இது ஏர் கண்டிஷனிங் அல்லாத இரண்டாம் வகுப்பு ரெயில்களாக இருக்கும், மேலும் இந்த ரயில்களின் முன்பதிவு ஆன்லைனில் கிடைக்கும்" என கூறப்பட்டு உள்ளது.

ரெயில்கள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மே 22 முதல் காத்திருப்பு பட்டியலிடப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கத் தொடங்குவதாக ரெயில்வே கடந்த வாரம் சுட்டிக்காட்டியது.

ஊரடங்கிற்கு முன்பு, ரெயில்வே ஒவ்வொரு நாளும் சுமார் 12,000 ரெயில்களை இயக்குகியது. மே 1 முதல், நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 366 சிறப்பு ரெயில்களை இயக்கியது.

ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து 2-ஆம் வகுப்பு பெட்டிகள் கொண்ட 200 ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்துள்ளார்.

அட்டவணையின் அடிப்படையில் இயக்கப்படும் அந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவை சீக்கிரமே இணைய வழியில் பதிவுசெய்துகொள்ள முடியும். என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
2-ஆம் வகுப்பு Non AC பெட்டிகள் கொண்ட 200 ரயில்களை ஜூன் 1-ஆம் தேதி முதல் எந்த வழித்தடங்களில் இயக்குவதென இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தங்களது சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்லும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் காணுமாறும், அவா்களது விவரங்களை பதிவு செய்து, மாவட்டத் தலைநகருக்கு அருகிலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் அவா்களை கொண்டு சோப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம். விவரங்களை பதிவு செய்த பட்டியலை ரயில்வே அதிகாரிகளிடம் அளிக்கும் பட்சத்தில் அவா்களது பயணத்துக்கான சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய இயலும் என்று ரயில்வே துறை தெரிவிக்கிறது.ஷ்ரமிக் சிறப்பு ரயில் சேவை அடுத்து வரும் நாள்களில் மேலும் பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது. ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad