Type Here to Get Search Results !

தற்போதைய சூழலில் பணத்தை பெருக்கும் எளிய வழி; மருந்து நிறுவனங்கள் சார்ந்த ஃபண்டுகள்

தற்போதைய சூழலில் பணத்தை பெருக்கும் எளிய வழி; மருந்து நிறுவனங்கள் சார்ந்த ஃபண்டுகள் தான் சிறந்த வழி
பலருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் கடைசி வரை எண்ணமாகவே இருக்கும். சிலருக்கு பணத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை எப்படி செயல்படுத்துவது என்பது எப்படி என்று பலருக்கு தெரிவதே இல்லை. அப்படிபட்டவர்களுக்குத் தான் இந்த கட்டுரை. இனி யாரும் கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கு மியூச்சவல் ஃபண்ட். அதிலும் இந்த மியூச்சுவல் ஃபண்டில் சிறந்த முதலீடுகளில் ஒன்று தான் செக்டோரல் ஃபண்டுகள்.

எப்போது முதலீடு செய்யலாம் ஆக நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில், மருந்து நிறுவனங்கள் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் தற்போது அத்தியாவசிய தேவைகளில் மருந்து பொருள்களும் ஒன்றாக உள்ளது. அதிலும் உலகெங்கிலும் மருந்து தேவை அதிகரித்துள்ள நிலையில், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் தங்களது உற்பத்தியை அதிகரிக்க கூடும். இதனால் அவர்களது வர்த்தகம் மேன்மையடையும். கூடுதல் வருவாயும் பெற முடியும். 

தற்போதைக்கு சிறந்த 4 ஃபண்டுகள்

நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் (Nippon India Pharma Fund)
டாடா இந்தியா பார்மா & ஹெல்த் கேர் ஃபண்ட் (TATA India Pharma & Healthcare Fund)
யுடிஐ ஹெல்த்கேர் ஃபண்ட் (UTI Healthcare Fund)
எஸ்பிஐ ஹெல்த்கேர் ஃபண்ட் (SBI Healthcare Opportunities Fund)

பாதுகாப்பான முதலீடு சிலர் மியூச்சவல் ஃபண்ட் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் நாம் செய்யும் தவறே எந்த ஃபண்டினை எப்போது தேர்தெடுப்பது என்பது தான். குறிப்பாக அந்த ஃபண்டுகளை தேர்தெடுக்கும் போது நமக்கு பல சந்தேகங்கள் எழும். அப்படிப்பட்டவர்கள் குழப்பமே அடைய வேண்டும். பொன் முட்டையிடும் வாத்தினை போல தான் பார்மா ஃபண்டுகள். ஏனெனில் இதற்கான தேவை என்பது எப்போதுமே குறைவதில்லை.

இதனால் இத்துறைகளில் முதலீடு செய்வது எப்போதுமே மிக பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ரிஸ்க் அதிகம் - வருமானமும் அதிகம் பொதுவாக இந்த செக்டோரல் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பார்கள். ஆனால் அதற்கேற்ப வருமானமும் உண்டு. சரியான ஆலோசனையுடன், சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் நாம் ஜெயிக்க முடியும். உதாரணத்திற்கு மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம். இந்த செக்டோரல் ஃபண்டுகள் குறிப்பாக எந்த துறை நல்லவிதமாக செல்கிறதோ, அந்த சமயத்தில் கொண்டு வருவார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad