Type Here to Get Search Results !

வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களின் தகவலை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களின் தகவலை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று சமீபத்தில் வீடு திரும்பியவர்கள் பற்றிய தகவலை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளால் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து புதிதாக வரும் நபர்களை கண்காணிக்க வேண்டி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திற்குள் வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். லாரிகளில் காய்கறிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. அதேசமயம் லாரிகள், வேன்கள், கன்டெய்னர் லாரிகளில் டிரைவர்கள், உதவியாளர்கள் தவிர வேறு ஏதேனும் நபர்கள் உள்ளார்களா? என்று பார்வையிட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளை சேர்ந்த வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வேலை செய்த புதிய நபர்கள் சமீபத்தில் வீடு திரும்பி உள்ளார்களா? என்று தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு திரும்பியவர்களின் தகவல் அடிப்படையில், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் வெளிமாநிலங்களில் ரிக் தொழிலில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் வீடு திரும்பிய நிலையில் விவரங்களை சேகரிக்கவில்லை என்றால் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் உடல்நிலை நன்றாக உள்ளது என்று கருதக்கூடாது. அவர்களால் அவர்களின் வீடுகளில் உள்ள முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஊரடங்கு அமல் படுத்துவதில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இருசக்கர வாகனங்களில் ஒரு நபருக்கு மேல் செல்ல அனுமதிக்க கூடாது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் இன்றி வெளியே வரவும் அனுமதிக்ககூடாது. இவ்வாறு வெளியில் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவ டிக்்கைகளுக்காக முதல் -அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒரு மாத ஊதியத்்தை வழங்கிய ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல் ஆகியோருக்கு அனைத்து அலுவலர்களும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ் உள்பட துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தானாக முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே தென்காசி மாவட்ட பொதுமக்கள் அரசின் உத்தரவை மதித்து வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவுவதை தடுக்க ஒத்துழைக்கவேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் காய்ச்சல் அறிகுறி கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

 காய்ச்சல், சளி, தும்மல், இரும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீடு தேடி வருகின்ற ஊழியர்களிடம் மறைக்காமல் தெரிவிக்கவேண்டும். அப்படி அறிகுறி இருந்தால் பொதுமக்கள் தானாக முன்வந்து உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் தாக்குலில் இருந்து தற்காத்து கொள்ள உடனே இந்த பரிசோதனையை பொதுமக்கள் செய்யவேண்டும். மேலும் டாக்டர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவேண்டும்.

டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் தாங்களாகவே மருந்துகடைகளில் நோய்களுக்கு மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். முககவசம் அணியால் வெளியே செல்லக்கூடாது. வீட்டை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். திறந்த வெளியில் மல ஜலங்கள் கழிக்காதிருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக தடுக்க இயலும்.

வீட்டிலும், வெளியிலும், சேவை பார்க்கும் இடத்திலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும். தன்னலம் மறந்து பணியாற்றிக்கொண்டு இருக்கும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில்6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகலெக்டர் கோவிந்தராவ் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பு பணி

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8,173 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பிய 438 நபர்கள் என மொத்தம் 9,520 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8,173 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

6¾ லட்சம் பேருக்கு பரிசோதனை

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 54 பேரில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 54 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 1,63,368 வீடுகளை சேர்ந்த 6,93,447 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் விவசாய பணி சம்பந்தமாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய பணி சம்பந்தமாக வேளாண்மை அதிகாரிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கொரானா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், வேளாண்மைப்பணிகள், அத்தியாவசிய பணிகளாக கருதப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில், அதாவது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாய தொழிலாளர் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு வேளாண்மை துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்மந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை உதவி அலுவலர், வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் போன்ற அதிகாரிகளை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன்– 9443540426, அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார்– 9942982578, சேரன்மாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேசுவரி– 9489477619, கடையம், கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உதயகுமார்– 9442796071, கடையநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம்– 9894236933, களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பரிமளம்– 9095056629, குருவிகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்– வாணி 8300157815.

மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுபசெல்வி– 9442025935, மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்– நயினார்முகமது 9445627853, நாங்குநேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா– 9486271166, பாளையங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளிராகினி– 8610003288, முக்கூடல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார்– 89034 89817, ராதாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதாபாய்– 9486652706, சங்கரன்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொன்ராஜ்– 9443791985, செங்கோட்டை, தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள்– 9994574571, வள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன்– 9442999501, வாசுதேவநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவமுருகன்– 7812812750.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad