Type Here to Get Search Results !

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்- ஜோதிகா விவகாரத்தில் சூர்யா; வறுமையில் வாடிய கர்ப்பிணிக்கு உதவிய நடிகர் விஜய்

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்- ஜோதிகா விவகாரத்தில் சூர்யா விளக்கம்
மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம் என்று நடிகர் சூர்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பாக தனியார் நிறுவன விருது விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ஜோதிகா, ‘எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்த விவகாரம் குறித்து சூர்யா, ஜோதிகாவோ எதும் கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.

ரசிகர் மன்றம் தெரிவித்த தகவல்: வறுமையில் வாடிய கர்ப்பிணிக்கு உதவிய நடிகர் விஜய்
மருத்துவ செலவுக்கு மட்டும் பணம் தந்தால் போதும் என அமீன் கூறியதால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை நடிகர் விஜய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனியில் ஊரடங்கு காரணமாக வறுமையில் தவித்து வந்த இஸ்லாமிய தம்பதிக்கு, நடிகர் விஜய் உதவி செய்துள்ளார்.

தென்காசியைச் சேர்ந்த அமீன், கண்சுலாபீவி ஜனவரி மாதத்தில் தேனியில் குடியேறி உள்ளனர் . ஒன்றரை மாதத்திலேயே கொரோனா அச்சம் வர, அமீன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளார். கண்சுலா பீவி 5 மாத கர்ப்பமாக இருக்கும் சூழலில், குடும்ப அட்டை இல்லாததால் ரேஷன் பொருட்கள் கூட இல்லாமல் தவித்துள்ளனர். மேலும் 5 மாத கர்ப்பிணியான தன் காதல் மனைவிக்கு மருத்துவச் செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர் நடிகர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ செலவுக்கு மட்டும் பணம் தந்தால் போதும் என அமீன் கூறியதால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை நடிகர் விஜய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad