Type Here to Get Search Results !

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா; சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்; கொரோனா பரவல் தொடர்பாக தீவிர விசாரணை: அதிபர் டிரம்ப்

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 2.11 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 211,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,063,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 921,427 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,302 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்; கொரோனா பரவல் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211,450 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,063,269 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 921,427 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், இதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன. மேலும், ஏற்கனவே இதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியுது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறோம் என்றும் கொரோனா வைரஸ் பரவலை சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், ஆனால் தவறவிட்டனர் என கூறினார். சீனா கொரோனா வைரஸை உலகம் முழுவதும் தடுத்து நிறுத்துவதற்கு முன்னர் அதை நிறுத்தியிருக்க முடியும். என்ன நடந்தது என்பது குறித்து அவரது நிர்வாகம் 'தீவிர விசாரணைகளை' நடத்தி வருவதாகவும் கூறினார்.'நாங்கள் மிகவும் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் சீனாவுடன் மகிழ்ச்சியடையவில்லை. 'இது ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இது விரைவாக நிறுத்தப்பட்டிருக்கலாம், அது உலகம் முழுவதும் பரவியிருக்காது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad