Type Here to Get Search Results !

காசி மீது பாயும் குண்டர் சட்டம்: சிக்கப்போகும் வி.ஐ.பி யார்? வைரலாகும் டிக்-டோக் வீடியோ

காசி மீது பாயும் குண்டர் சட்டம்: சிக்கப்போகும் வி.ஐ.பி யார்? 
பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரலாகும் டிக் டோக் வீடியோ

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி,  வயது 26. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார். அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார். ஆனால் இவர் படிக்கும்போதே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார்.

மாலை கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிட்டு வந்துள்ளார். பெண்ணியம் குறித்த கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிடம், இந்த கருத்துக்களை பார்த்து பல பெண்கள் காசியிடம் விழுந்துவிட்டனர்.. அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையும் எடுத்து வைத்துள்ளார். நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிறகு தன்னுடைய அம்மாவுக்கு புற்றுநோய், பணம் மருந்து வாங்க வேண்டும் என்று கேட்டு லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளார். தற்போது காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் இன்னொரு மோசடியும் வெளியே வந்துள்ளது… பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் தரைதளம், முதல் தளம் மட்டும் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டிருந்தது.. ஆனால் காசியோ, வீட்டின் முன்பகுதியையும் ஆக்கிரமித்து, தரைதளம், முதல்மாடி, 2-வது, 3-வது, 4-வது மாடி வரை கட்டி உள்ளார். இப்போது இதை இடிக்க நாகர்கோயில் மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நோட்டீஸையும் காசி வீட்டில் ஒட்டி உள்ளது.

முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விஷயம் வெளியே வந்தது.
புகாரை தொடர்ந்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.. அவர்களையும் போலுசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

அப்போதுதான் காசிக்கு சில அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.. “காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும்” என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.. இதையடுத்து 25 மதிக்கத்தக்க பெண் ஒரு என்ஜினியர் ஒருவர் புகார் தந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.. இந்த பெண்ணையும் காசி ஏமாற்றியுள்ளார்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொணரும் பொருட்டு, காசியை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை போல,இந்த சம்பவமும் நீர்த்துப்போகாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இதுபோன்ற நபர்கள் குற்றம் செய்ய தயங்குவார்கள் என்பது பாமர மக்களின் எண்ணமாக உள்ளது.

அரசியல்க கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களும், வி.ஐ.பிக்களின் பெயர்களும் அடிபடுவதால், இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம், முகநூலில் பழகி, பாலியல் மோசடி செய்த காசியின் 20 நண்பர்களை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இளம்பெண்களை பாலியல் ரீதியாகவும் பண ரீதியாகவும் மோசடி செய்த காசி மீது 3வதாக ஒரு புதிய வழக்குப் பதிவாகியுள்ளது. குண்டர் சட்டம் பாயவுள்ள நிலையில், அவரது தந்தை செய்த ஆக்கிரமிப்பும் மோசடியும் அம்பலமாகியுள்ளது

அவரால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததால், போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். காசி பயன்படுத்திய போலி முகநூல் கணக்குகள், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அனைத்தையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

அவரது நெருங்கிய வட்டத்தில் உள்ள 20 பேரை கன்னியாகுமரி போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.  இதில் சில அரசியல் கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களும், வி.ஐ.பிக்களின் பெயர்களும் அடிபடுவதால், இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

சென்னை, கோவை போன்ற பகுதிகளில் காசிக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள் யார் யார் என்ற புதிய பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேசமணிநகர் காவல்நிலையத்தில், மோசடிப்பேர்வழி காசி மீது மூன்றாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

காசி பயன்படுத்திய கணினி, லேப்டாப், மொபைல், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி வருகிறார்கள். காசி தொடர்பான வழக்குகளை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் தனிக்கவனம் செலுத்தி விசாரணை நடத்திவருகிறார்.

நாகர்கோவில் நகர ஏ.டி.எஸ்.பி. ஜவஹர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காசி தொடர்பாக ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போன் எண்ணான 9498111103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

காசியை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக கன்னியாகுமாரி மாவட்ட போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பெயரில் உள்ள வீடு, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இது குறித்து நாகர்கோவில் மாநராட்சிக்கு புகார் வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் காசியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கணேசபுரம் சாலையில் ஒரு அடி ஆக்கிரமிப்பு இருப்பதும், ஒரு மாடி கட்டிடத்திற்கு அனுமதி பெற்று 4 மாடி கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

விதிமீறல் குறித்து 30 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம்பறித்த காசி மீது குண்டர் சட்டம் விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது

காசி செய்த மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உள்ளூர் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். காசிக்கு உதவி செய்தவர்களில், சிக்கப்போகும் விஐபி யார்? என்பதே பெரும்பாலனவர்களின் கேள்வியாக இருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad