ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? இருக்கையில் இருந்து எழுங்கள் - தமிழக முதல்வரை கடுமையாகச் சாடும் கமல்ஹாசன்

ஊரடங்கு உத்தரவு குறித்த மற்ற மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவுஎடுக்கும்போது தமிழக முதல்வர் எதற்காக காத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் கோரிக்கைகள் விடுத்துவருகின்றன.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவுபெறுகிறது. இருந்தும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துதான் வருகிறது. அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் கோரிக்கைகள் விடுத்துவருகின்றன.

இருப்பினும், மத்திய அரசு எந்த அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. ஆனால், அதற்கு முன்னதாக ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் வரை நீட்டித்துள்ளன. மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மற்ற மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்துவரும் எங்களுடைய முதல்வர் எதற்காக காத்திருக்கிறார்? அவருடைய தலைவரின் குரலுக்காகவா? என்னுடைய குரல் மக்களுக்கானது? அவர்களிடமிருந்து வருவது. நீங்கள் இன்னமும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் எந்திரியுங்கள் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. கமிஷன் வாங்குவதற்கு விலக்கி வைப்பதற்கும் இது உகந்த நேரம் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, தடை உத்தரவை மீறும் செயலாகும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்ட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘அண்டை மாநிலங்கள் சில கொரோனா உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். கமிஷன் வாங்குவதற்கு ஒதுக்கி வைப்பதற்கு இது உரிய நேரம் அல்ல. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )