Type Here to Get Search Results !

கொரோனா நோயாளிகளை அனுப்பி காஷ்மீரில் நோய் பரப்ப பயங்கர சதி: பாகிஸ்தான் திட்டம்; சர்ச்சையைக் கிளப்பிய ஜோதிகாவின் பேச்சு

கொரோனா நோயாளிகளை அனுப்பி காஷ்மீரில் நோய் பரப்ப பயங்கர சதி: பாகிஸ்தான் திட்டம் அம்பலம்
 கொரோனா நோயாளிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து, இந்த நோயை பரப்பும் பயங்கரமான சதித் திட்டத்தை பாகிஸ்தான் வகுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானும் இதில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு பிரதமர் இம்ரான்கானும் கொரோனா பாதித்த தொழிலதிபர் ஒருவர் தன்னை சந்தித்து பேசியதால், நேற்று முதல் 14 நாட்களுக்கு தன்னை தனிமைபடுத்தி கொண்டு இருக்கிறார். இந்த நிலையிலும், காஷ்மீர் எல்லையில் தனது வழக்கமான அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் தொடர்கிறது. இந்திய ராணுவ நிலைகள், அப்பாவி மக்கள் வசிக்கும் கிராமங்களின் மீது அந்நாட்டு ராணுவம் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டத்தை பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ தீட்டி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை டிஜிபி.யான தில்பக் சிங், கெந்தர்பால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை முகாமை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீருக்குள் கொரோனா பாதித்த நோயாளிகளை ஊருவச் செய்து, அப்பாவி மக்களிடம் அந்த நோயை பரப்ப பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை முறியடிக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, மக்களும் உஷாராக இருக்க வேண்டும்,’’ என்றார்.

ஜம்முவில் சோபியான் மாவட்டத்தில் உள்ள செல்ஹோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படைகள் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை நடத்தின. அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படைகள் கொடுத்த பதிலடியில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சையைக் கிளப்பிய ஜோதிகாவின் பேச்சு - பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றி என்ன பேசினார்?
பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா ஒன்றை தனியார் சேனல் சமீபத்தில் ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் சில பகுதிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஜோதிகா பேசியிருப்பதாவது, பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார்.ஜோதிகாவின் இந்தப் பேச்சை பதிவிட்டு கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.

இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad