Type Here to Get Search Results !

பிரதமர் மோடி கூறிய 7 வேண்டுகோள்கள்; ஊரடங்கின் போது கடைப்பிடிக்க வேண்டியது என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.
மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோடி கூறியதாவது;-

1. வீட்டில் இருக்கும் முதியவர்கள், ஏற்கனவே உடல் நலப் பிரச்சனை உள்ளவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. ஊரடங்கின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

3. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றலாம்.

4. மத்திய அரசு உருவாக்கியிருக்கும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்.

5.  உங்களுக்கு அருகாமையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். உதவிகளை செய்யுங்கள்.

6.  தொழில் நிறுவனங்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம்.

7. இந்த கடினமான சூழலில் முன்னின்று பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad